அண்மைய செய்திகள்

recent
-

தமிழினத்துக்கு நல்ல அரசியல் தலைமை இல்லாத போது...

தேசிய அரசு இருந்தால்தான் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்ற முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் தெரிவித்துள்ளார்.

இதோ! தீர்வு வருகிறது என்று மார்தட்டிய சம்பந்தர் ஐயா இப்போது தேசிய அரசு இருந்தால்தான் அரசியலமைப்பை நிறைவேற்றலாம் என்கிறார்.

தேசிய அரசு எதுவரை இருந்தால் அரசியலமைப்பு நிறைவேறும் என்பதை அவர் நிறு திட்டமாகக் கூறியிருந்தால், ஓரளவுக்கு மன ஆறுதல் கிடைத்திருக்கும்.

அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்தை அமுலாக்குவதில் காலதாமதம் செய்யப்படுவது பற்றி எந்தச் சிந்தனையும் இன்றி அப்பாவித் தனமாக, தேசிய அரசு இருக்க வேண்டும். அது இருந்தால்தான் அரசியலமைப்புச் சீர்திருத்தம் அமுலாகும் என சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சருடன் இரா.சம்பந்தர் கவலை கொண்டதை நினைக்கும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது.

இந்த நாட்டு ஆட்சியாளர்கள் எமக்கு எதுவும் தரமாட்டார்கள் என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்.

தவிர, ஜனாதிபதி மைத்திரியைக் கூட ஏமாற்றவல்லவர்கள் அரசாங்கத்தில் இருக்கும் போது நம்மை ஏமாற்றமாட்டார்களா என்ன? என்ற விடயங்கள் எல்லாம் சாமானிய தமிழ் மக்களும் நன்கு அறிவர்.

இருந்தும் மிக நீண்ட அரசியல் அனுபவம்; தந்தை செல்வநாயகம், தளபதி அமிர்தலிங்கம் ஆகியோருடனான அரசியல் பாசறையில் கற்றறிந்த பாடங்கள் என அரசியல் விற்பன்னம் இருக்கும் என்று நாம் நினைத்திருந்த சம்பந்தர் ஐயா தேசிய அரசின் ஒற்றுமைக்காகக் கண்ணீர் விடுகிறார்.

தனது காலத்திலாவது இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விடலாம் என்ற நம்பிக்கை ஒன்றுதான் அவரின் கவலைக்குக் காரணம்.

என்ன செய்வது தமிழர்களின் தவக் குறைவு, விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல அரசியல் தலைமை கிடைக்கவில்லை.

ஒரு நல்ல தலைவர் என்று தமிழ் மக்கள் நம்புபவரும் பிதாமகர் எனும் வீஷ்மாச்சாரியராகவே இருப்பேன்.

ஆட்சியும் மாட்சியும் எனக்கு வேண்டாம் என்பதாக இருக்கும் போது தமிழ் மக்கள் என்ன செய்ய முடியும்.

எதுவாயினும் எங்கள் அன்புக்குரிய சம்பந்தர் ஐயா அவர்களே! உங்களை நாம் மதிக்கின்றோம். போற்றுகின்றோம்.

ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் நமக்கு எதுவும் தரமாட்டார்கள் ஐயா!

தேசிய அரசை ஒருக்கால் திரும்பிப்பாருங்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடைந்து விட்டது.

தமிழரசுக் கட்சியை கந்தறுத்தாச்சு, சர்வதேச போர்க்குற்ற விசாரணை இல்லை, ஐ.நா தீர்மானத்தை அமுலாக்குவதில் காலம் கடத்தல்.

இப்போது அரசியல் அமைப்பை அமுலாக்காமல் செய்வதற்காக தேசிய அரசை முடிவுறுத்தும் வேலை ஆயத்தமாயிற்று. எப்படி! காய் நகர்த்தல். இது ஒன்றும் உங்களுக்குத் தெரியாமல் போயிற்று.

பரவாயில்லை. ஒரு நல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இந்த டிசம்பர் 31 வரையாவது என்னோடு இருங்கள் என்று கெஞ்சுகிறார்.

அவருக்கே அப்படியொரு நிலை என்றால் உங்களுக்கு தூ...


தமிழினத்துக்கு நல்ல அரசியல் தலைமை இல்லாத போது... Reviewed by NEWMANNAR on July 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.