அண்மைய செய்திகள்

recent
-

வித்தியா கொலை வழக்கில் வசமாக மாட்டிக்கொண்ட பிரதி பொலிஸ் மா அதிபர்! ஆதாரத்துடன் புலனாய்பு பிரிவினர்....


புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு நேற்று அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதையடுத்தே, அவர் கைது செய்யப்பட்டார்.

குற்றவியல் சட்டத்தின் 209ஆவது பிரிவின் கீழ், பிரதான சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தமை, சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு உதவினார் என அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாரணைகளின் போது தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க மறுப்பு வெளியிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், சேவையில் இருக்கும் போது கைது செய்யப்பட்ட மூத்த பொலிஸ் அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வித்தியா கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவியதாக தெரிவித்து நேற்றைய தினம் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க திர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியா கொலை வழக்கில் வசமாக மாட்டிக்கொண்ட பிரதி பொலிஸ் மா அதிபர்! ஆதாரத்துடன் புலனாய்பு பிரிவினர்.... Reviewed by Author on July 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.