அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் மஞ்சள் கோடு இல்லா பிரதான வீதிகள்....சிக்னல்லைற்ரும்.....???

மன்னார் மாவட்டத்தில் பலவகையான அபிவிருத்திப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் மிகவும் முக்கியமாக செய்யப்படவேண்டிய விடையங்களை செய்யாமல் விட்டு விடுகின்றார்கள் அதில் முக்கியமாக செய்ய வேண்டியது  பிரதான பாதைகளில் மஞ்சள் கோடு மற்றும் வெள்ளைக்கோடுகள் இருக்கவேண்டும். அது மட்டுமா...
சிக்னல் லைற்றும் இல்லை ஏன்....என்ன காரணம்....

 மஞ்சள் கோடு இல்லா........

  • வைத்திய சாலைகள்
  •  பாடசாலைகள்
  • வழிபாட்டுத்தளங்கள்
  • அரச அலுவலகங்கள் உள்ள இடங்கள்
  • பேரூந்து தரிப்பிடங்கள் பாதை
  • பிரதான வீதிக்கடவைகள் நாற்சந்திகள் உள்ள சனநெரிசல் மிக்க இடங்கள்  இப்படியான இடங்களில் மஞ்சள் கோடுகள் இல்லை  இருந்த்தும் அழிந்து போய் உள்ளது அவை மீண்டும் புதுப்பிக்கப்படவில்லை... (புதிதாக  மஞ்சள் கோடுகளை அகலமாக தகுந்த முறையில் இடுதல் நலம்)

முக்கியமாக சிக்னல் லைற் இருக்கவேண்டிய இடங்களில் சில
  • மன்னார் பொது வைத்திய சாலை சந்தி (நாற்சந்தியுள்ளது)
  • மன்னார் புதிய நகரசபைக்கு முன்னாள்
  • மன்னார் சதோசா கட்டிடத்திற்கு முன்னாள்
  • மன்னார்  கச்சேரி அலுவலகத்திற்கு முன்னாள்
  • இதோடு பாதசாரிகள் பின்பற்ற வேண்டிய  வழிமுறைகள் பொறித்த குறியீடுகள் அடங்கிய பலகைகள் உரிய இடங்களில் பொருத்துதல் வேண்டும்.
மன்னாரில் ஒவ்வொரு வருடமும் வீதிகள் புனரமைப்பு பணிகள்  நடைபெறுகின்றது அது தரமான முறையில் அமையுமானால் ஏன்  இந்த நிலமை இதற்கு  மழையினையும் சதுப்பு நிலம் என்றும் காரணங்களை குறிப்பிடுகின்றார்கள்.
 இருக்கும் மட்டும் இருந்து விட்டு மழைகாலங்களில் தான் வீதி திருத்தும் பணிகள் செய்வது என வழக்கமாக்கி வைத்துள்ளார்கள்.

அபிவிருத்தி என்பது மக்களின் தேவைகளையும் சேவைகளையும் கருத்தில் கொண்டும் மாவட்டத்தின் எழுச்சியினை கருத்தில் கொண்டும் செயலாற்றுவதே தவிர சும்மா கடமைக்கு செய்வது அல்ல... இதை நன்கு உணர்ந்து செயலாற்ற வேண்டியது ஒவ்வொரு அதிகாரிகளினதும்  மக்களினதும் பொறுப்பாகும்.
விபத்துக்கள் அதிகமாகின்றது. மக்களின் பாதுகாப்பினையும் நலனையும் கருத்தில் கொண்டு விருப்பத்துடன் செயலாற்ற முன்வாருங்கள்.

 மஞ்சள் கோட்டினை மறந்துபோன பயணிகளும் வாகன சாரதிகளும்....

மஞ்சள் கோடு மறந்தா...நீ.......
மரணம் உனை அழைக்கும் சுடுகாடு...
.


-மன்னார் விழி-







மன்னார் மாவட்டத்தில் மஞ்சள் கோடு இல்லா பிரதான வீதிகள்....சிக்னல்லைற்ரும்.....??? Reviewed by Author on July 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.