அண்மைய செய்திகள்

recent
-

100 ஆண்டு பழமையான விஸ்கி.. ஒரு க்ளாஸ் இவ்வளவா? சுவிஸ் பாரில் அசத்திய இளைஞன்.....


சுவிஸ் மது விடுதி ஒன்றில் சீனா இளைஞர் ஒருவர் ஒரு க்ளாஸ் விஸ்கியை 9,999 சுவிஸ் பிராங்குகள் கொடுத்து பருகியுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.

வடகிழக்கு சுவிட்சர்லாந்தில், செயின்ட் மோரிட்ஸ் பகுதியில் உள்ள ஆடம்பர வால்டுஸ் ஹோட்டலிலே ஒரு க்ளாஸ் விஸ்கி 9,999 சுவிஸ் பிராங்குகளுக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்த ஹொட்டேலின் Devil's Place Whisky பாரானது 2,500 அரிய வகை போத்தல்களை சேகரித்து வைத்தமையால் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருந்தது.

இந்த செய்தியை அந்த ஹோட்டல் ஊழியர் உறுதி செய்துள்ளார். கடந்த வாரம் நண்பர்களுடன் குறித்த பாருக்கு சென்ற சீனா இளைஞர் ஒருவர், பாரில் உள்ள பழமையாக விஸ்கியை கேட்டுள்ளார்.

எனினும், ஹோட்டலின் உரிமையாளர் Bernasconi, வாடிக்கையாளரிடம் மிகவும் விலையுயர்ந்த 1878ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மெக்கல்லன் விஸ்கி விற்பனைக்கு இல்லை என கூறியுள்ளார்.

ஆனால், சீனா இளைஞர் அந்த விஸ்கி வேண்டும் என பிடிவாதமாகயிருந்துள்ளார். இதனையடுத்து Bernasconi தந்தை விஸ்கியை விற்க முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து, முதன் முறையாக திறக்கப்பட்ட மெக்கல்லன் விஸ்கி, ஒரு க்ளாஸ் 9,999 சுவிஸ் பிராங்குகள் கொடுத்து வாங்கி சீனா இளைஞர் பருகியுள்ளார்.

மெக்கல்லன் விஸ்கி பாட்டில் திறக்கப்படுவதற்கு முன் 50,000 சுவிஸ் பிராங்குகள் என குறிப்பிட்ட Bernasconi, தற்போது, போத்தல் திறக்கப்பட்டு விட்டதால் அதை பருக விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு விலை சற்று குறைவாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

100 ஆண்டு பழமையான விஸ்கி.. ஒரு க்ளாஸ் இவ்வளவா? சுவிஸ் பாரில் அசத்திய இளைஞன்..... Reviewed by Author on August 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.