அண்மைய செய்திகள்

recent
-

இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் இலங்கை கடற்படப்பினுள் தொடர்கின்றது-எம்.எம்.ஆலம்.(படம்)


இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட மீனவர்களின் படகுகள் கைப்பெற்றப்பட்டு குறித்த படகுகள் மீள வழங்கும் போது மீண்டும் எக்காரணம் இலங்கை கடற்பரப்பினுள் நுழையக்கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்திருந்த போதும், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் நுழையும் சம்பவம் அதிகரித்துள்ளதாக வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

மன்னார் மாவட்ட மீனவ சமாசத்தில் இன்று திங்கட்கிழமை(21) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,,


இந்திய இலுவைப்படகுகளின் விடுவிப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் அனுசரனையுடன், இலங்கை அரசு இந்திய மீனவர்களிடம் இருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு கைப்பெற்றப்பட்ட 42 படகுகளை விடுவிப்பதற்கு இனக்கம் தெரிவித்திருந்தனர்.

இதன் அடிப்படையில் எங்களுடைய ஒத்துழைப்பினை நாங்கள் வழங்கியிருந்தோம்.அந்த படகுகளின் விடுவிப்பிற்காக அரசுக்கு சில நிபந்தனைகளையும் நாங்கள் விடுத்திருந்தோம்.

குறித்த நிபந்தனையில் கைப்பெற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் போது அவர்கள் மீளவும் எமது கடற்பரப்புக்குள் அத்து மீறி நுழையக்கூடாது என்ற நிபந்தனையினை பிரதான நிபந்தனையாகவும், இலுவை மடி தடைச்சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும், வெளிநாட்டு படகுகள் கையாலும் திருத்தச்சட்டத்தையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என அரசுக்கு கோரியிறுந்தோம்.

ஒரு சில சட்டங்களை இன்று அரசு நிறைவேற்றியுள்ளது.குறிப்பாக இலுவை மடித்தடைச்சட்டத்தை பாராளுமன்றத்தில் கடந்த 6 ஆம் திகதி நிறைவேற்றி அதற்கான அங்கிகாரத்தை பெற்றுள்ளது.அதே நேரம் வெளிநாட்டு படகு திருத்தச்சட்டமும் தற்போது பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.

இதே வேளை கைப்பெற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவித்து அதனை கொண்டு செல்லுவதற்கு இந்தியாவில் இருந்து ஒரு குழு இலங்கைக்கு வந்துள்ளதாகவும்,அவர்கள் படகுகளை திருத்தம் செய்து அவற்றை கொண்டு செல்ல உள்ளதாகவும் நாங்கள் அறிகின்றோம்.இதற்காக நாங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளோம்.

எனவே கைப்பெற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகள் விடுவிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் மீண்டும் எக்காரணம் கொண்டும் எமது கடற்பரப்புக்குள் நுழையக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தோம்.

எனினும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெடுந்தீவு கடற்பரப்பில் சுமார் 49 இந்திய மீனவர்கள் படகுகளுடன் இலங்கை கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ச்சியாக அந்த மீனவர்களின் அத்து மீறிய வருகை நிறுத்தப்படாமல் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கைகள் நல் என்ன சமிஞ்ஞையாக ஏற்றுக்கொண்டு இலங்கை கடற்பரப்பினுள் நுழைவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை தளபதி ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் தமிழராக உள்ளார்.அவர் கடந்த காலங்களில் கிழக்கு மாகாணங்களில் கடற்கடை தளபதியாக கடமையாற்றியுள்ளார்.

எனவே இந்திய தரப்பினரால் தொடர்ச்சியாக முன் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டான தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றனர்.

அவர்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களை குறி வந்தாலும்,வடபகுதி மீனவர்களாகிய நாங்கள் அதனை மறுத்து வருகின்றோம்.

எனவே சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த கடற்படை தளபதி நியமிக்கப்பட்டுள்ளமையானது எதிர் காலத்தில் இந்தியத் தரப்பினர் முன் வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள் இனி வரும் காலங்களில் இல்லாமல் போகும் சந்தர்ப்பங்கள் உள்ளது.

தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை தளபதியை மீனவ சமூகத்துடன் இணைந்து வரவேற்பதோடு,எதிர்காலத்தில் வட பகுதி மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள அரசினால் அனுமதிக்கப்பட்ட கடல் தொழில் முறைமைகளை 24 மணி நேரமும் வட பகுதி கடலில் மேற்கொள்ள ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 -மன்னார் நிருபர்-

இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் இலங்கை கடற்படப்பினுள் தொடர்கின்றது-எம்.எம்.ஆலம்.(படம்) Reviewed by Author on August 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.