அண்மைய செய்திகள்

recent
-

இருப்பதையும் பறிக்கும் 20-வது திருத்தச்சட்டம் - மிகமோசமானது என முதலமைச்சர் சாடல்


மாகாண மக்களிடம் தற்போது இருக்கின்ற சுதந்திரத்தைப் பறிக்கும் சட்ட வரைபே 20-வது அரசியல் திருத்தச்சட்டம் என சாடியுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தற்போது அரசாங்கம் கூறிவரும் இனப்பிரச்சினை சம்பந்தமான தீர்வு விடயத்தில் அரைகுறைத் தீர்மானத்தை எம் மீது திணிக்க இந்தச் சட்டம் வழிவகுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபை 104 ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடி பேரவை மண்டபத்தில் நடைபெற்றது.

 அதில் 20-வது அரசியல் யாப்புத் திருத்தம் தொடர்பில் முதலமைச்சர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். முதலமைச்சர் தனதுரையில்,

நாங்கள் பரிசீலிக்கும் 20-வது திருத்தச்சட்ட வரைபானது 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்புச் சம்பந்தமாக கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் எல்லாவற்றிலும் மிக வும் மோசமானது என்று வர்ணிக் கப்பட்டிருக்கின்றது. 

இந்தத் திருத்த மானது நான்கு விடயங்களைக் கருத்தில் கொண்டுள்ளது.

சகல மாகாணசபைகளினதும் தேர்தலை ஒரே காலத்தில் நடத்துவது, மாகாணசபைகளின் தற்போதைய வாழ் காலத்தை நிர்ணயிப் பதை பாராளுமன்றத்திற்கு அளிப் பது, சில மாகாணசபைகளின் வாழ் காலத்தை நீடிப்பது சிலவற்றின் வாழ்காலத்தைக் குறைப்பது, மாகாண சபைகளின் வாழ் காலத்தை நிர் ணயித்து அவற்றை அதிகாரம் இழக்கச் செய்த பின் அச் சபைகளின் அதிகாரங்களைப் பாரா ளுமன்றம் கைப்பற்றிக் கொள்வது.

இவை சம்பந்தமாக சற்று விரிவாக ஆராய்ந்து பார்க்கும் பொழுது அரசியல் யாப்பின் 154பு(2) என்ற உறுப்பு ரையின் படி 13ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப்பரவல் சம்பந்தமான நிலைப்பாட் டினை மாற்றும் சட்டம் ஏதேனும் கொண்டு வரப்பட்டால் அந்தத் திருத்த வரைபை ஒவ் வொரு மாகாண சபைகளுக்கும் அவற்றின் கருத்தறிய ஜனாதிபதியானவர் அனுப்ப வேண்டும் என்றும் அந்தத் திருத்தம் பாராளு மன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற முன் இது செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்ப ட்டுள்ளது.

அவ்வாறு இந்தத் திருத்தம் சம் பந்தமாகச் செய்யப்படவில்லை. அதன் தாற் பரியம் என்னவென்றால் மாகாண சபைக ளின் அதிகாரங்களைப் பாதிக்குந் திருத்தச் சட்டமெதுவும் கொண்டு வருவதாக விருந்தால்  அவை மாகாண சபைகளுக்கு அனுப்பப்பட்டு அவற்றின் கருத்தை அறிந்து, திருத்தமானது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது அந்தக் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவ ற்றை உள்ளடக்கியே இறுதியான திருத்தம் பாராளுமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்பதே.

அதை விட்டு அவசர அவசரமாக இந்தத் திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தின் ஒழுங்கு நிரலில் ஏற்கப்பட்டுள்ளது. ஆகவே அரசியல் யாப்பின் உறுப்புரை 154பு(2) மீறப் பட்டுள்ளது.

அரசியல் யாப்பின் 3ஆவது உறுப்புரை யைப் பரிசீலித்தோமானால் இறைமையா னது மக்கள் வசமுள்ளது எனப்பட்டுள்ளது. இந்த இறைமையானது மக்களின் தேர்தல் உரித்தையும் உள்ளடக்கியுள்ளது.

ஆகவே பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் வந்தபின் ஒன்பது மாகாண மக்களும் தம் சார்பில் தமது மாகாணசபைகளைத் தேர்ந்தெடுக்கும் தேர் தல் உரித்தைப் பெற்றிருந்தார்கள்.

இந்த இருபதாவது திருத்தச் சட்டம் மூலம் மாகாண மக்களுக்கிருக்கும் அந்த உரித்தை பாராளு மன்றத்திற்கு மாற்ற எத்தனிக்கப்படுகின்றது. மாகாண சபையை சட்டப்படி கலைத்து புதிய தேர்தலை எதிர்நோக்கவைக்கும் அதிகாரம் மாகாணசபையையே சாரும்.

இந்தத் திருத் தச் சட்டத்தின் படி மாகாணசபையைக் கலை க்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழ ங்கப்பட்டுள்ளது.

இதனால் தமது மாகாண சபைகளைக் கலைத்து உரிய நேரத்தில் தேர்தல் நடத்தும் மாகாண மக்களின் அதி காரம் இந்தச் சட்டத்தின் படி பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டு குறிப்பிட்ட நாளுக்கு முன் தமது காலத்தை முடிவுறுத்த வேண்டிய மாகாண சபைகள் குறிப்பிட்ட நாள் வரை யில் தமது தேர்தலை நடத்த முடியாதாக்கப்ப டுகின்றது.

அதாவது மாகாண மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரித்து இதனால் பாதிக்கப்படுகிறது.
மாகாண மக்களின் சுதந்திரத்தைப் பறி க்கும் சட்ட வரைபே இந்த 20-வது திருத்தச் சட்டம்.

எமது அரசியல் யாப்பு உறுப்புரை 10 மக்களின் சிந்தனைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதை தடைசெய்கின்றது.


இது வட கிழக்கு மாகாண சபைகளையே அதிகமாகப் பாதிக்கும் தற்போது அரசாங்கம் கூறிவரும் இனப்பிரச்சினை சம்பந்தமான அரைகுறைத் தீர்மானத்தை எம் மீது திணி க்க இந்தச் சட்டம் வழிவகுக்கின்றது. முழு மையான நிலைபேறு தீர்வொன்றினைக் கொண்டுவர அரசாங்கம் தயங்குவதாகத் தெரிகின்றது.

மேலும் ஒரே தினத்தில் தேர்தலை நட த்துவோம் என்று கூறும் அரசாங்கம் இந்த அரசாங்க காலம் வரையில் தேர்தலை நடத்தமல் இருக்கவும் இந்தச் சட்டம் வழிவகுக்கின் றது.
ஊவா மாகாணசபையின் காலம் 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் முடிவ டைகிறது. அதற்கிடையில் தினமொன்றை நிர்ணயித்து மாகாண சபைத் தேர்தல்களை தாமதப்படுத்தவே இந்த ஏற்பாடு. இதனால் பல்வேறு காரணங்களுக்காக நாங்கள் இந்  தச் சட்ட வரைபை எதிர்க்க வேண்டும்.

மாகாண மக்களின் தேர்தலுரித்துடன் சேர்ந்த இறையாண்மை பாதிக்கப்படுகிறது. அந்த உரித்தைப் பாராளுமன்றம் தன்வசப்ப டுத்தி மாகாண உரித்துக்களைத் தான் பாவிக்க எத்தனிப்பது மாகாண மக்களுக்குக் கொடுத்த அதிகாரப்பரவலை சிரிப்புக்கிடமாக் குகின்றது.

அந்த உரித்தைப் பாராளுமன்றம் தன் வசப்படுத்தும் போது, முக்கியமாகத் தமிழ் பேசும் மக்கள் கோரும் அரசியல் ரீதியான கோரிக்கைகள் அனைத்தும் காற்றில் பறக்க விட்டுத் தான்தோன்றித்தனமான அரசியல் யாப்பொன்றை எம் மீது திணிக்க வாய்ப்பிரு க்கின்றது. எனவே இதனை எதிர்த்து வட மாகாண சபையில் தீர்மானம் எடுக்க வேண்டும் என முதலமைச்சர் தனது உரையில் மேலும்  கேட்டுக்கொண்டுள்ளார்.
              
இருப்பதையும் பறிக்கும் 20-வது திருத்தச்சட்டம் - மிகமோசமானது என முதலமைச்சர் சாடல் Reviewed by Author on September 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.