அண்மைய செய்திகள்

recent
-

ஆஸ்திரேலியாவில் அரசு அனுமதி பெறாத 26000 துப்பாக்கிகள் ஒப்படைப்பு....


ஆஸ்திரேலியாவில் அரசு அனுமதி பெறாமல் வைத்திருந்தவர்களில் இதுவரை 26 ஆயிரம் பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் அரசு அனுமதி பெறாமல் பலர் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்துள்ளனர். அங்கு 2 லட்சத்து 60 ஆயிரம் கள்ள துப்பாக்கிகள் இருப்பதாக போலீசார் கணித்துள்ளனர்.

இதனால் அங்கு தீவிரவாத தாக்குதல்கள் பெருகி வருகின்றன. எனவே அவற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. சட்டவிரோதமான துப்பாக்கிகளை ஒப்படைப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.

இல்லாவிடில் ரூ.1 கோடியே 30 லட்சம் அபராதம் மற்றும் 14 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் பொது மன்னிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதை தொடர்ந்து சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அரசிடம் துப்பாக்கிகளை ஒப்படைத்து பொது மன்னிப்பு பெற்று வருகின்றனர். அதன்படி இதுவரை 26 ஆயிரம் பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.

இத்திட்டம் வருகிற 30-ந்தேதி வரை அமலில் இருக்கும். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக நீதித்துறை மந்திரி மைக்கேல் கீனன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் அரசு அனுமதி பெறாத 26000 துப்பாக்கிகள் ஒப்படைப்பு.... Reviewed by Author on September 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.