அண்மைய செய்திகள்

recent
-

‘இர்மா’ புயலுக்கு கரீபியன் பகுதியில் உள்ள செயிண்ட் மார்டின் தீவுகளில் 6 பேர் பலி....


வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள ‘இர்மா’ புயலின் தாக்கத்தினால் கரீபியன் கடல் பகுதியில் பிரான்ஸ் அரசுக்கு சொந்தமான செயிண்ட் மார்டின் தீவுகளில் 6 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள ‘இர்மா’ புயலின் தாக்கத்தினால் கரீபியன் கடல் பகுதியில் பிரான்ஸ் அரசுக்கு சொந்தமான  செயிண்ட் மார்டின் தீவுகளில் 6 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் புதிதாக உருவான சக்திவாய்ந்த இர்மா புயல் கரீபியன் நாடுகளை பதம் பார்க்கத் தொடங்கி உள்ளது.

இர்மா புயல் காரணமாக செயின்ட் மார்ட்டின், செயின்ட் பார்தலெமி ஆகிய தீவுகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சுழற்று அடித்த காற்றில் வீடுகளின் கூரைகள் பறந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மரங்கள் வேருடன் சாய்ந்தன. தெருக்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

இந்நிலையில், இந்த புயலினால் பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவுகளில் 6 பேர் வரை பலியானதாக பிரான்ஸ் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார்.

‘இர்மா’ புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், கரீபியன் நாடுகளான ஹைதி, கியூபா, டொமிகன் குடியரசு, புயிட்ரோ ரிகோ ஆகிய நாடுகளை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் கடலில் மாபெரும் அலைகள் உண்டாகலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ‘இர்மா’ புயல் எச்சரிக்கையால் புளோரிடா மாகாணத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘இர்மா’ புயலுக்கு கரீபியன் பகுதியில் உள்ள செயிண்ட் மார்டின் தீவுகளில் 6 பேர் பலி.... Reviewed by Author on September 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.