அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்ற நிலமெஹெவர' மக்கள் நடமாடும் சேவை-(படம்)


ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாகவும்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழி காட்டலின் கீழ் அமுல் படுத்தப்பட்ட 'நிலமெஹெவர' ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித்திட்ட நடமாடும் சேவை இன்று(9) சனிக்கிழமை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் பிரதேசச் செயலகம் ஆகியவை இணைந்து மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் குறித்த நடமாடும் சேவையினை ஏற்பாடு செய்திருந்தனர்.

மன்னார் பிரதேச்ச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலன் அமையும் வகையில் குறித்த சேவை இடம் பெற்றது.

இன்று (9) சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த நடமாடும் சேவையின் போது பிறப்புச் சான்றுதல்,தேசிய அடையாள அட்டை,ஓய்வூதிய சம்பளப் பிணக்குகள்,சாரதி அனுமதிப்பத்திரம், மூக்குக்கண்ணாடி, ஆலோசனைச் சேவை, காணிப்பிணக்குகள், முதியோர் அடையாள அட்டை,உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுதீன், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டதோடு,உள் நாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு காணி உறுதிகள்,சுய தொழில் உதவித்திட்டங்கள் மற்றும் மாற்றாற்றல் கொண்டவர்களுக்கு சக்கர நாற்காலிகள் என்பவ வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நடமாடும் சேவையின் சேவையின் போது மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பல ஆயிரக்கணக்காணவர்கள் கலந்து கொண்டு குறித்த நடமாடும் சேவையூடாக தமது தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர்.

10-09-2017 ஞாயிற்றுக்கிழமை காலை நானாட்டான் பிரதேசத்தில் குறித்த நடமாடும் சேவை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
















மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்ற நிலமெஹெவர' மக்கள் நடமாடும் சேவை-(படம்) Reviewed by Author on September 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.