அண்மைய செய்திகள்

recent
-

தடை செய்யப்பட்ட மீன் பிடி முறமைகளை பயன்படுத்து பவர்களுக்கு சாதகமாகவே கடற்தொழில் திணைக்களம் செயற்படுகின்றது- எம்.எம்.ஆலம்


கடல் சூழலுக்கும்,கடல் வளங்களுக்கும் அழிவை ஏற்படுத்தும் இழுவை மடி கொண்டு மேற்கொள்ளப்படும் மீன் பிடி முறமையினை தடை செய்ய மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக நாடாளுமன்றம் ஊடக சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும் இன்று வரை குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமையினால் உள்ளூரில் உள்ள மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ந்தும் முகம் கொடுத்து வருவதாக வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

மன்னார் மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தில் இன்று புதன் கிழமை(13) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

கடல் சூழலுக்கும் கடல் வளங்களுக்கும் அழிவை ஏற்படுத்தும் இழுவை மடி கொண்டு செய்யும் தொழில் முறையினை தடை செய்ய மன்னார் மாவட்டம் உட்பட வடமாகாண மீனவர்களும் சமூக ஆய்வாளர்களும்,வடமாகாண கடற்தொழிலாளர் இணையம்எமற்றும் ஏனைய மீனவ சமாசங்களும் கடந்த 08.02.2017ம் திகதியன்று கடற்தொழில் அமைச்சரை சந்தித்த போது முன்வைத்த கோரிக்கைக்கு அமையவும் தொடர்ந்து இத்தொழில் முறைக்கு எதிராக அரசை வற்புறுத்தியதன் நிமிர்த்தமும் இத்தொழில் முறையின் பாதிப்பு தொடர்பாக பல முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வுகளின் பின்னர் கடற்தொழில் அமைச்சர் ஏற்கனவே கடற்தொழில் சட்டத்தில் கூறப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கொண்டு வந்ததிருத்தத்தை நாடாளுமன்றம் ஊடாக கடந்த 06.07.2017 அன்று நாடாளுமன்ற பிரதிநிதிகள் அனைவரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றி அது அரசவர்த்த மானியிலும் பிரசுரிக்கப்பட்டது.

இருந்தும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 02 மாதங்கள் கடந்த நிலையில் எமதுகடற்பரப்பில் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கை சற்று குறைவடைந்திருந்தாலும் உள்ளூரில் இத்தொழில் புரிவோர் முன்பை விட பாதிக்கப்படுவதுடன் தங்களின் தொழில் நடவடிக்கைகளை கடலையன்டிய கரையோரங்களிலும் மிகவும் தீவிரமாக செய்து வருகின்றார்கள்.

இதன் காரணமாக சிறுதொழில் புரியும் மீனவர்கள் மிகவும் பாதிப்பதுடன் பட்டிவலை ஏனைய தொழில் செய்வோருக்கு பெரும் இழப்பையும் சேதத்தை ஏற்படுத்துவதுடன் கறவலைதொழில் புரிபவர்பகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ் இழுவைமடித் தொழில் முறையை இத்தொழில் புரிவோரும், சில மீனவத் தலைவர்களும்,சில அரசியல் பிரதிநிதிகளும்,சில மதத் தலைவர்களும் கண்ணை மூடிக்கொண்டு நியாயப்படுத்துகின்றனர். இதனைவிட ஏனைய தொழில்களுக்கு நடைமுறையில் கூறப்பட்ட விடயங்களை தீவிரமாக கையாளும் கடற்தொழில் திணைக்களமும் இத்தொழில் புரிவோருக்கு சாதகமாகவே செயற்படுகின்றனர்.

எனவே இச்சட்ட மூலத்தை நடை முறைப்படுத்துவதில் கால தாமதம் செய்யும் ஒவ்வொரு நிமிடமும் வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் எதிர் காலத்தில் இழக்கப்படப்போவதை இத்தொழிலை நியாயப்படுத்துபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே அமைச்சர் அவர்கள் நிறைவேற்றப்பட்ட இழுவை மடிச்சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த கடற்தொழில் திணைக்களம் மற்றும் கடற்படையினரை பணிப்பதுடன் மேலும் வெளிநாட்டுப் படகுகளுக்கான ஒழுங்கு விதிச் சட்ட திருத்தத்திற்கு தற்போது சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதால் இச்சட்டத்தை விரைவாக நாடாளுமன்றில் நிறை வேற்றி இதன் பிற்பாடு இந்திய தரப்புடனான மீனவர் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறும் ஏற்கனவே விடுவிக்க இணங்கப்பட்ட படகுகள் போக மீதமாக இருக்கும் படகுகளுக்கு இச்சட்டம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதனையும் வடமாகாண மீனவர்களாகிய நாம் கேரிக்கை விடுவதாக அவர் தெரிவித்தார்.தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கடற்தொழில் அமைச்சருக்கு அனுப்பி வைத்துளள்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

போல் நிஷந்தன்
தடை செய்யப்பட்ட மீன் பிடி முறமைகளை பயன்படுத்து பவர்களுக்கு சாதகமாகவே கடற்தொழில் திணைக்களம் செயற்படுகின்றது- எம்.எம்.ஆலம் Reviewed by NEWMANNAR on September 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.