அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை உள்ளிட்ட தென் கிழக்காசிய நாடுகளுக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து!


எதிர்வரும் 2050ஆம் ஆண்டளவில் கடல் மட்டம் 4.8 மீற்றரினால் உயரும் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, மேற்கு அண்டார்டிகா பகுதியில் கடலுக்கு அடியிலும், அதன் மேல் பகுதியிலும் பாரிய அளவில் பனிப்பாறைகள் உள்ளன. அவை தற்சமயம் சிறிது சிறிதாக உருகி வருகின்றன.

இதன் காரணமாக 2050ஆம் ஆண்டில் கடல் மட்டம் 4.8 மீற்றர் அளவிற்கு உயரும் என்று தெரியவந்துள்ளது.

அதேபோல கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இதனால் கடல் நீர்மட்டம் 3.4 மீற்றர் உயரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழகத்திலும் இது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு சுற்றுச்சூழல் துறையின் கீழ் செயல்படும் பருவநிலை மாற்ற செயல்திட்டம் என்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் கடல் மட்டம் உயர்வது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் சர்வதேச ரீதியாக கடல் மட்டம் உயரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை தமிழகம் உட்பட தென் கிழக்காசிய நாடுகளிலும் பாரிய பாதிப்புக்கள் ஏற்படும் என அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட தென் கிழக்காசிய நாடுகளுக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து! Reviewed by Author on September 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.