அண்மைய செய்திகள்

recent
-

சுவிற்சர்லாந்தில் இலங்கை ஆசிய, கலாச்சார, வர்த்தக மற்றும் உணவுப் பெருவிழா!


இலங்கை, ஆசிய, கலாச்சார, வர்த்தக மற்றும் உணவுப் பெருவிழா பிரம்மாண்டமான முறையில் இவ்வருடமும் சுவிற்சர்லாந்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த கலாச்சார நிகழ்வு இம்மாதம் 8, 9, மற்றும் 10ஆம் திகதிகளில் சுவிற்சர்லாந்து சூரிச் மாநகரில் இடம்பெறவுள்ளது.

இலங்கை, சுவிற்சர்லாந்து வியாபார சமூகம் ஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெரும் இந்நிகழ்வில் 30 உணவு கடைகள், 30 வர்த்தக கடைகள் என வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Munasinghe , Tel. 044 666 0 555 - 044 666 0 556

இதன்போது, இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகளும், கலாச்சார உடைகள் என்பனவும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அத்தோடு இலங்கையின் கலாச்சார தனித்துவத்தை பேணும் கண்டிய நடனம், பரத நடனம், இசை நிகழ்ச்சிகள் மற்றும் இலங்கை மற்றும் சுவிற்சர்லாந்து சிறுவர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறவுள்ளன.

சுவிற்சர்லாந்தில் இலங்கை ஆசிய, கலாச்சார, வர்த்தக மற்றும் உணவுப் பெருவிழா! Reviewed by Author on September 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.