அண்மைய செய்திகள்

recent
-

தமிழனை போற்றும் பிரித்தானிய நாளிதழ்! பெருமை சேர்க்கும் தருணங்கள்


சவுத் வேல்ஸ் மற்றும் லிவர்பூல் ஆகிய பகுதிகளில், மருத்துவராக கடமையாற்றி வரும் குணசேகரன் குமார் எனும் மருத்துவரை, பிரித்தானிய நாளிதழொன்று சிறந்த ஒரு மனிதராக கெளரவித்துள்ளது. குறித்த நாளிதழ் பல உயிர்களை காத்த கடவுள் என அவரை குறிப்பிட்டுள்ளதுடன், இதுவரை சுமார் 2,000 பேரது உயிரை காப்பாற்றியுள்ள மருத்துவர்கள் தர வரிசையில் அவரது பெயரும் இடம்பிடித்துள்ளது. இந்த விடயம் அனைத்து தமிழர்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேல்சில் நிறைமாத கர்பிணியாக இருந்த தாய் ஒருவர் காரில் செல்லும் போது பெரும் விபத்தில் சிக்கியுள்ளார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றவேளை அங்கே பணியில் இருந்த குணசேகரன் உடனே அறுவை சிகிச்சை செய்து பிள்ளையை வெளியே எடுத்துள்ளார். பிறந்து சில நிமிடங்களே ஆன அந்த சிசுவுக்கு, மார்பில் பிரச்சினை இருப்பதை உடனே கண்டுபிடித்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்துள்ளதோடு மட்டுமல்லாமல் சுமார் 7 மணி நேர அறுவை சிகிசை செய்து தாயாரையும் காப்பாறியுள்ளார். வெறோனிக்கா, ஜோன்ஸன் என்னும் குறித்த பெண் கூறுகையில், என் உயிரை எனக்கு திருப்பி தந்த நபர் குணசேகரன் என்றும், அவர் தலை சிறந்த ஒரு மருத்துவர் என்றும் தெரிவித்துள்ளார்.

 அத்துடன், நானும் எனது பிள்ளையும், எமது வாழ்க்கையையே அவருக்கு அர்ப்பணித்தாலும், அவர் செய்த உதவியை என்னால் மறக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனால் எந்த ஒரு பெருமிதமும் இன்றி, குணசேகரன் மிகவும் சாதாரணமாக காணப்படும் ஒரு மருத்துவர் என்பதுடன், அவர் பல முது கலைகளை கற்று, பிரித்தானியாவில் அதி உச்ச தேர்ச்சி பெற்ற மருத்துவராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழனை போற்றும் பிரித்தானிய நாளிதழ்! பெருமை சேர்க்கும் தருணங்கள் Reviewed by Author on October 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.