அண்மைய செய்திகள்

recent
-

வடகொரியா ஏவுகணையால் குறிவைத்திருக்கும் நாடுகள்: வெளியான பகீர் தகவல்


வடகொரியா அதன் அண்டை நாடுகளின் முக்கிய நகரங்களையும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நாடுகளையும் குறிவைத்து தமது ஏவுகணை பலத்தை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிம் பரம்பரையில் சக்தி வாய்ந்த தலைவராக திகழும் கிம் ஜோங் வுன் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் வடகொரியாவை சக்தி வாய்ந்த ஏவுகணைகளாலும் அணு ஆயுதங்களாலும் பலப்படுத்தி வந்துள்ளார்.


கடந்த யூலை 4 ஆம் திகதி வடகொரியா முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை சோதனை செய்தது.அதன் பின்னர் தொடர்ந்து ஏவுகணை சோதனையை முன்னெடுத்து வரும் வடகொரியாவால் மூன்றாம் உலக யுத்தம் உருவாகலாம் என்ற நிலை உச்சத்தில் எட்டியது. மட்டுமின்றி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதங்கள் உலக யுத்த சாத்தியத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.

இதனிடையே வடகொரியாவின் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் உலகின் முக்கிய நகரங்களை குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல் போர் குறித்து ஆராயும் நிபுணர்களிடையே மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் சோவித் அரசால் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்கட் ஏவுகணை தான் வடகொரியாவின் பலம் என தெரிய வந்துள்ளது.

1980களில் எகிப்தில் இருந்து இதன் சூட்சுமங்களை பெற்றுக் கொண்ட வடகொரியா, பின்னர் அதனை அடிப்படையாக கொண்டு Hwasong-5, Hwasong-6, Hwasong-7 மற்றும் Hwasong-9 போன்ற உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நான்கு வகை ஏவுகணைகளை உருவாக்கி சாதித்தது.குறித்த ஏவுகணைகளால் சர்வ சாதாரணமாக 1000 கி.மீ தூதம் கடந்து சென்று துல்லியமக தாக்க முடியும். இதனால் தென் கொரியாவின் பல முக்கிய நகரங்கள், ஜப்பானின் இரண்டாவது பெரிய நகரமான ஒசாகா ஆகியவை கடும் அச்சுறுத்தலின் பிடியில் உள்ளன.

மட்டுமின்றி அமெரிக்காவின் சர்வ வல்லமை பொருந்திய THAAD அமைப்பையே தவிடுபொடியாக்கக் கூடிய Scud–C MaRV மற்றும் Scud–B Marv ஆகிய ஏவுகணைகளும் வடகொரியா வசம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் அடுத்த ஆயுதம் பாலிஸ்டிக் ஏவுகணைகள். இவர் துல்லியமாக 2000 கி.மீ தூரம் துல்லியமாக சென்று தாக்கக் கூடியவை.இதனால் ஜப்பானின் மற்றும் தென் கொரியாவின் முக்கிய நகரங்கள், மங்கோலியாவின் கீழில் உள்ள பிரதேசங்கள் மட்டுமின்றி வடகொரியாவின் நட்பு நாடான சீனா மற்றும் ரஷ்யா வரை பாலிஸ்டிக் ஏவுகணைகளைலால் தாக்குதல் நடத்த முடியும்.

வடகொரியா ஏவுகணையால் குறிவைத்திருக்கும் நாடுகள்: வெளியான பகீர் தகவல் Reviewed by Author on October 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.