அண்மைய செய்திகள்

recent
-

106 நோயாளிகளை கொன்ற கொலைக்கார நர்ஸ்: வெளியான பகீர் தகவல் -


ஜேர்மனியில் நோயாளிகள் இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆயுள் தண்டனை பெற்ற ஆண் செவிலியரே எஞ்சிய 106 கொலைகளுக்கும் பொறுப்பு என பொலிசார் பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஜேர்மனியின் ப்ரெமன் நகரில் அமைந்துள்ள Delmenhorst மருத்துவமனையில் நீல்ஸ் ஹோகல்(41) என்பவர் செவிலியராக பணியாற்றி வந்தார்.கடந்த 2005-ஆம் ஆண்டு நோயாளி  ஒருவருக்கு தவறான மருந்தை இவர் செலுத்துவதை பார்த்த மற்றொரு செவிலியர் அதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஹோகல் நோயாளிக்கு தவறான மருந்தை அளித்தது உறுதியானது. இதையடுத்து 2008-ஆம் கைது செய்யப்பட்ட அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் இந்த விவாகரம் தொடர்பில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்ட பொலிசார்,

ஹோகல் சுமார் 90 நோயாளிகளை கொலை செய்திருக்கலாம் என ஆதாரங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தினர்.</p><p>இதனிடையே வியாழனன்று பொலிசார் வெளியிட்ட தகவலில் மேலும் 16 நோயாளிகளின் சாவில் ஹோகல் சம்பந்தபட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மேலதிக தரவுகளை திரட்டி அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஹோகல் மீது புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சாகும் தருவாயில் இருக்கும் நோயாளிகளை காப்பாற்றினால், மருத்துவமனையில் தனக்கு மரியாதையும் புகழும் கிடைக்கும் என ஹோகல் நம்பியுள்ளார்.

இதற்காக ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு இதய கோளாறை உண்டு பண்ணும் மருந்தை அதிக அளவில் அவர் செலுத்தி உள்ளார்.

அவ்வாறு செலுத்தப்பட்ட நோயாளிகளில் சிலரை மட்டுமே அவரால் காப்பாற்ற முடிந்துள்ளது. பலர் உயிரிழந்த போதும் தனக்கு புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஹோகல் தொடர்ந்து இதே மாதிரி வேறு நோயாளிகளுக்கும் செய்து வந்துள்ளார்.
1999 முதல் 2005 வரையான காலகட்டத்தில் ஹோகல் பணிபுரிந்த இருவேறு மருத்துவமனைகளில் மொத்தம் 106 நோயாளிகளின் சாவுக்கு ஹோகல் காரணமாக மாறியுள்ளார்.

தற்போது மேலும் 5 உடல்களை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைக்கு உடுபடுத்தியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கொலை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


106 நோயாளிகளை கொன்ற கொலைக்கார நர்ஸ்: வெளியான பகீர் தகவல் - Reviewed by Author on November 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.