அண்மைய செய்திகள்

recent
-

ஆங்கிலேயரை ஆட்டம் காண வைத்த தமிழனின் படைப்பு! 2000ஆண்டுகளாகியும் அழியா சாதனை


தமிழனின் தோற்றம் கூட இந்த நவீன யுகத்திலும் மர்மமாகவே உள்ளது. இந்த நிலையில் நவீன அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தை மிஞ்சுவதாக உள்ளது ஆதி தமிழனின் கண்டுபிடிப்புக்கள்.

அந்த வகையில் தனக்கு ஒப்பாரும் இல்லை, தனக்கு மிக்காரும் இல்லை எனப் புகழ் பெற்ற சோழ மன்னர்களில் மாவீரனாக போற்றப்படும் கரிகால மன்னனால் கட்டப்பட்ட அணை தான் கல்லணை.
இந்தியாவில் கட்டப்பட்டு ஏறத்தாழ 2000 ஆண்டுகள் ஆகின்ற கல்லணையென்றால் நமக்கு ஓரளவு பரீட்சியமானது தான். ஆனால் அந்த கல்லணை ஆங்கிலேயரையே ஆட்டம் காண வைத்த வரலாறு தொடர்பில் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

கல்லணை கட்டப்பட்ட காலத்தில் உலகமே வியந்து பார்த்த நிலையில் கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த ஆர்தர் காட்டன், ஆதி தமிழரின் திறமையை உலகிற்கே எடுத்துரைத்துள்ளார். தனது வாழ்நாளில் பல ஆண்டுகாலங்களை ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியியலாளர் கல்லணை தொடர்பான அராய்ச்சிக்காக செலவிட்டுள்ளார்.
தனது காலத்தை செலவிட்ட அவர் அந்த அணைக்கு “மகத்தான அணை” (Grand Anicut) என்ற பெயரை கொடுத்து அந்த அணைக்கு மேலும் அங்கீகாரம் கொடுத்துள்ளார்.

காவிரியின் மீது கட்டப்பட்டுள்ள கல்லணையின் அடித்தளம் மணலில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பழந்தமிழர் தொழில்நுட்பமானது இன்று வரையில் வியத்தகு சாதனையாகப் புகழப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 




ஆங்கிலேயரை ஆட்டம் காண வைத்த தமிழனின் படைப்பு! 2000ஆண்டுகளாகியும் அழியா சாதனை Reviewed by Author on November 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.