அண்மைய செய்திகள்

recent
-

2018 ‘ பட்ஜட்’ – வடக்­குக்­கான அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள்"


  • முக்­கோண பொரு­ளா­தார வல­யம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. தம்­புள்ளை மற்­றும் கொழும்­பு­டன் இணைக்­கப்­பட்ட நவீன​ பொரு­ளாதார மைய­மொன்று, யாழ்ப்­பா­ணத்­தில் நிறு­வப்­ப­ட­வுள்­ளது. இதற்­காக 100 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.
*அநு­ரா­த­பு­ரம், சிவ­னொ­ளி­பா­த­மலை, மடு, கோணேஸ்­வ­ரம், முன்­னேஸ்­வ­ரம் மற்­றும் நல்­லூர் ஆகிய இடங்­க­ளில் யாத்­தி­ரி­கர்­கள் தங்­கு­மி­டங்­களை நிறு­வு­வ­தற்கு 100 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

* நெடுந்­தீவு மற்­றும் கிளி­நொச்­சி­யில் இரண்டு உணவு பத­னி­டும் நிலை­யங்­கள் உரு­வாக்­கப்­ப­டும். இவற்­றில் தாவர உயிர்­பச்சை அடிப்­ப­டை­யி­லான பனங்­க­ருப்­பட்டி, பனம்­ப­ழம் மற்­றும் பனங்­கி­ழங்கு என்­பன சிறப்­பாக பத­னி­டப்­ப­டும். இதற்கு 40 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

*மயி­லிட்­டித் துறை­மு­க­மா­னது மீன்­பி­டித் துறை­மு­க­மாக அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டும். போரி­னால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சத்­தில் பாரம்­ப­ரி­ய­மாக வாழ்­ப­வர்­கள் தமது வாழ்­வா­தா­ரங்­களை மீள ஆரம்­பிப்­ப­தற்கு ஆத­ர­வ­ளிக்­கப்­ப­டும். மீன­வர்­கள் தமது மீன் உற்­பத்­தி­களை களஞ்­சி­யப்­ப­டுத்­து­வ­தற்­கும் வச­தி­ய­ளிக்­கும் வகை­யில் குளிர் அறை­கள் மற்­றும் களஞ்­சி­யங்­கள் அர­சி­னால் நிறு­வப்­ப­டும். இதற்கு 150 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

*தற்­போது அச்­சு­வேலி கைத்­தொ­ழில் வல­யத்­தில் 50 சத­வீ­தம் மாத்­தி­ரமே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இந்த வல­யத்­தில் தொழில் முயற்­சி­களை ஆரம்­பிக்­கும் நிறு­வ­னங்­க­ளின் மாதாந்த மின்­சா­ரக் கட்­ட­ணத்­தில் 50 சத­வீ­தத்தை 2 வரு­டங்­க­ளுக்கு அரசு பொறுப்­பேற்­ப­தோடு இந்த வல­யத்­தின் பொது வச­தி­க­ளும் மேம்­ப­டுத்­தப்­ப­டும்.

*பொலன்­ன­றுவை, இரத்­தி­ன­புரி மற்­றும் கிளி­நொச்சி ஆகிய மாவட்­டங்­க­ளில் விவ­சாய விளை­பொ­ருள்­களைச் சேமித்து வைக்­கக் கூடிய வகை­யில் 3 பண்­ட­க­சா­லை­க­ளின் கட்­டு­மான வேலை­கள் பூர்த்தி செய்­வ­தற்கு 250 மில்­லி­யன் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

*சிலா­பம், மிரிஸ்ஸ, காரை­ந­கர் மற்­றும் புர­ண­வெல்ல மீன்­பி­டித் துறை­மு­கங்­களை மேம்­ப­டுத்த முத­லீடு செய்­யும் அதே­வேளை, மீன்­பி­டித் துறை­மு­கங்­க­ளில் இறங்கு துறை­கள் மற்­றும் நங்­கூ­ர­மி­டும் தளங்­களை விருத்தி செய்து இற்­றைப்­ப­டுத்­தல் செய்­வ­தற்கு ஆயி­ரத்து 750 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

*ஏற்­று­ம­திச் சந்­தை­க­ளில் நில­வும் பதப்­ப­டுத்­தப்­பட்ட கடல் அட்­டை­க­ளுக்­கான கேள்­வியை கருத்­திற் கொண்டு கிளி­நொச்சி மாவட்­டத்­தில், பூந­க­ரிப் பிர­தே­சத்­தில் முழு­மை­யான பின்­தள இருப்பு வலை­யம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. இத­னுள் தனி­யார் துறை­யி­னர் கட­லட்­டை­களை அறு­வடை செய்­ய­வும் பதப்­ப­டுத்­தல் செய்­ய­வும் இடத் துண்­டங்­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

* தனி­யார் துறை­யி­ன­தும் மற்­றும் தொல்­பொ­ரு­ளி­யல் திணைக்­க­ளத்­தி­ன­தும் ஆத­ர­வு­டன் சுற்­றுலா மேம்­பாட்­டுப் பணி­ய­கத்­தி­னால் மாத்­தறை, அம்­பாந்­தோட்டை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை பிரெட்­றிக் கோட்டை, மன்­னார் கோட்டை . அல்லி இரா­ணிக் கோட்டை மற்­றும் கற்­பிட்டி கோட்டை உள்­ள­டங்­க­லாக 6 கோட்­டை­கள் அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு 250 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

*யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கத்­தின் வவு­னியா வளா­க­மா­னது சகல வச­தி­க­ளை­யும் கொண்ட நூல­கம் மற்­றும் தக­வல் தொழில்­நுட்ப நிலை­யம் என்­ப­வற்­றினை அமைப்­ப­தன் மூலம் மேலும் வலுப்­ப­டுத்­தப்­ப­டும். இதற்­காக 200 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

*நாட்­டி­லுள்ள அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் பெரும்­பா­லும் காணப்­ப­டு­கின்ற சிறு­நீ­ரக நோய் அதி­க­ரிப்­பினை கவ­னத்­திற் கொண்டு பொலன்­ன­றுவை, அநு­ரா­த­பு­ரம் மற்­றும் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கங்­க­ளில் அதி நவீன இயந்­தி­ரங்­கள் (ஈஎஸ்­ட­பிள்­யூ­எல்) மூன்­று­டன் சிறப்பு சிறு­நீ­ர­கத் தொகு­தி­க­ளும் தாபிக்­கப்­ப­டும். இதற்கு 450 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­கின்­றது.

*கிளி­நொச்சி, தெல்­தெ­னிய, பூகொடை மற்­றும் கந்­த­ளாய் நீதி­மன்­றக் கட்­டி­டத் தொகு­தி­கள் இடம் மாற்­றம் செய்­யப்­பட்டு விரி­வாக்­கம் செய்­யப்­ப­டு­வ­த­னூ­டாக இந்த நீதி­மன்­றங்­க­ளில் காணப்­ப­டும் நெரி­சல் மற்­றும் வச­திக் குறை­பா­டு­கள் நிவர்த்தி செய்­யப்­ப­டும். இதற்கு 400 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

*நல்­லி­ணக்­கத்­தினை முதன்­மைப்­ப­டுத்­திய வாழ்­வா­தார அபி­வி­ருத்தி, பொரு­ளா­தார வலு­வூட்­டல் மற்­றும் சமூக உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்­திக்கு அரசு ஆத­ர­வ­ளிக்­கும். இது வடக்­கி­லுள்ள மாற்­றுத் திற­னாளி பெண்­க­ளுக்­கான சிறப்பு நிலை­யம் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தை­யும் உள்­ள­டக்­கி­ய­தா­கும். இதற்­காக 2 ஆயி­ரத்து 750 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

*மன்­னார் நக­ர­ச­பைக்கு உட்­பட்ட பகு­தி­கள் மறு­சீ­ர­மைப்பு மற்­றும் மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு 250 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.
*மன்­னார் தாழ்­வுப்­பாட்­டில் கலா­சார மண்­ட­பம் அமைக்க 25 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.
2018 ‘ பட்ஜட்’ – வடக்­குக்­கான அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள்" Reviewed by Author on November 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.