அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டம் மேலும் 3வருடங்களுக்குள்அபிவிருத்தி அடைய வழி சமைக்கப்படும் அமைச்சர் சுவாமிநாதன்


மன்னார் மாவட்டத்துக்கென பல மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. 03வருடங்களுக்குள் மேலும் அபிவிருத்தி பணிகள் இவ் மாவட்டத்தில் எனது அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலை மறுசீரமைப்பு புணர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவலக அமைச்சர் D.M.சுவாமிநாதன் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

-மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவில் மடு பிரதேச செயலாளர் எவ்.சத்தியஜோதி தலைமையில் கடந்த சனிக்கிழமை (04.11.2017) நடைபெற்ற நிகழ்வில் வாழ்வாதார உதவிகள் நூறு பேருக்கு வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட சிறைச்சாலை மறுசீரமைப்பு புணர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவலக அமைச்சர் D.M.சுவாமிநாதன் இங்கு தொடர்ந்து பேசுகையில்
ஏங்களுடைய அமைச்சு இந்த வருடம் என்ன செய்திருக்கின்றார்கள் அத்துடன் கடந்த வருடம் என்ன செய்திருக்கின்றார்கள் என்பது உங்களுக்கு தெளிவு படுத்தப்பட்டுள்ளது. எங்கள் அமைச்சின் மூலமாக கடந்த வருடம் 263 மில்லியன் ரூபாவும் இந்த வருடம் 223 மில்லியன் ரூபாவை மன்னார் மாவட்டத்துக்கு வழங்கியுள்ளோம்.
இதில் வாழ்வாதார அபிவிருத்திக்கு 100 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளோம். உண்மையில் இன்றுவரை இடம்பெயர்ந்தவர்களுக்காக 573 மில்லியன் ரூபா செலவில் 706 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பகுதிகள் சேதமடைந்த வீடுகளில் 92 வீடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் குடிநீர் திட்ட பயணாளிகள் 892 பேருக்கு 15 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலவச மின்சார இணைப்புக்காக 25 மில்லியன் ரூபா செலவில் 1035 இணைப்புக்களை மேற்கொண்டுள்ளோம். சிறு நீர்தாங்கி அபிவிருத்திக்கென 33 பயணாளிகளுக்கு 100 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த வருட திட்டத்தில் சிறு நீர் குளங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் நான் மேற்கொள்ள இருக்கின்றேன் என இங்கு தெரிவித்தார்.

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமுகமாக 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாரியளவு சுகாதார துப்புரவு அபிவிருத்தி 225 திட்டத்துக்கென 15 மில்லியன் ரூபா நிதி ஒதக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்துக்கு 500 பேருக்கு 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 31 கல்வித்திட்டத்துக்கென 50 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை முறை மையத்துக்கென 30 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.

கடற்படையினால் பயன்படுத்தப்பட்ட முள்ளிக்குளம் மக்களின் பூர்வீகமாக குடியிருந்த 100 ஏக்கர் காணியை அவர்களிடமிருந்து எமது அமைச்சு மீளப்பெற்றுள்ளோம். இதற்காக நாம் கடற்படையினருக்கும் இராணுவத்தினருக்கும் நன்றி தெரிவித்து நிற்கின்றேன். காரணம் நாங்கள் கேட்கும் விடயங்களை அவர்கள் முன்வந்து எம்முடன் ஒத்துழைத்து செயல்படுத்தி வருகின்றனர்.
எங்களுடைய அமைச்சானது மக்களாகிய உங்களது முன்னேற்றத்துக்காகவே செயல்பட்டு வருகின்றது. இன்னும் மூன்று வருடங்களுக்குள் நாங்கள் உங்களுக்கு பல அபிவிருத்தி வேலைகளை செய்வதற்காக இருக்கின்றோம். மன்னார் மாவட்டத்தை முன்னேற்றுவதற்காக நான் எனது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

நான் மன்னாருக்கு வந்ததும் முதலில் மடு ஆலயம் சென்று எனது ஆராதனையை செய்துவிட்டுதான் நான் இங்கு வந்துள்ளேன். அத்துடன் இன்று சிவபெருமானுக்கு ஒரு முக்கிய நாளாகவும் இருக்கின்றது. கார்திகை மாதத்திலே பௌர்ணமி நாளிலே அன்னத்தால் சாத்து படுத்தும் முக்கிய நாளாக அமைகின்றது.








மன்னார் மாவட்டம் மேலும் 3வருடங்களுக்குள்அபிவிருத்தி அடைய வழி சமைக்கப்படும் அமைச்சர் சுவாமிநாதன் Reviewed by Author on November 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.