அண்மைய செய்திகள்

recent
-

புதிய மாற்றங்களுடன் வெளியானது டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் -


ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைக்கான பட்டியலில் குறிப்பிடத்தக்க முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.இலங்கை டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் புஜாரா சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் 888 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 941 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி ஐந்தாவது இடத்தில் இருக்கும் நிலையில் ஒரு இலங்கை வீரர் கூட முதல் பத்து இடங்களில் இடம்பெறவில்லை. பந்துவீச்சாளர்கள் பட்டியலை பொறுத்தவரையில் இங்கிலாந்தின் ஜேன்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தில் உள்ளார்.

சுழற்பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வரும் ரவீந்திர ஜடேஜா இரண்டாம் இடத்துக்கு முன்னேற்றியுள்ளார். அதிவேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ள அஸ்வினுக்கு பட்டியலில் நான்காம் இடம் கிடைக்க, அனுபவம் வாய்ந்த இலங்கை சுழற் பந்துவீச்சாளர் ரங்கன ஹெரத்துக்கு ஐந்தாம் இடம் கிடைத்துள்ளது.

புதிய மாற்றங்களுடன் வெளியானது டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் - Reviewed by Author on November 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.