அண்மைய செய்திகள்

recent
-

நபருக்கு 13,275 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு: அப்படியென்ன குற்றம் செய்தார்?


தாய்லாந்தில் நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிக்கு விநோத தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புடிட் கிட்டிட்ராலோலிக் (34) என்பவர் பேன்ஸி என்ற நிதி நிறுவனத்தை நடத்தினார், அதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டியுடன் பணம் வழங்கப்படும் என விளம்பரம் செய்தார்.

இதையடுத்து சுமார் 40,000 பேர் 160 மில்லியன் டொலருக்கு மேல் முதலீடு செய்தனர், இதே போல் ரியல் எஸ்டேட், அழகுசாதன வியாபாரம், கார் விற்பனை போன்ற தொழிலையும் புடிட் தொடங்கினார்.
இதில் அதிகபடியான வருவாய் மற்றும் அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.
இந்நிலையில் நிதி மோசடி தொடர்பாக தாய்லாந்து நீதிமன்றத்தில் புடிட் மீது 2,653 வழக்குகள் பதிவாகின.

இதன் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தலைமறைவாக இருந்த புடிட்டை பொலிசார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி புடிட்டுக்கு 13,275 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
பின்னர் செய்த குற்றத்தை புடிட் ஒப்பு கொண்டதால் தண்டனையில் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்பட்டு 6,637 ஆண்டுகள் 6 மாதங்களாக தண்டனை குறைக்கப்பட்டது.

மேலும் புடிட் நடத்தி வந்த நிறுவனங்கள் மீது தலா 20 மில்லியன் டொலர்கள் அபராதமும், அவரால் பாதிக்கப்பட்டவர்களிடம் பெறப்பட்ட 17 மில்லியன் டொலர்கள் தொகைக்கு 7.5 சதவீதம் வருடாந்திர வட்டி தொகையுடன் புடிட் திருப்பி தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நபருக்கு 13,275 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு: அப்படியென்ன குற்றம் செய்தார்? Reviewed by Author on December 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.