அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தாழ்வுபாட்டு கடலில் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும் விடுதலை-


மன்னார் தாழ்வுபாட்டு கடலில் நேற்று   திங்கட்கிழமை(4) காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 25 மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்த நிலையில் குறித்த மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை 05-12-2017 மதியம் மன்னார் நீதிமன்றில் ஆஜராகிய போது குறித்த மீனவர்களை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா விடுதலை செய்தார்.

மன்னார் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் நேற்று  திங்கட்கிழமை(4) காலை வழமை போல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

குறித்த மீனவர்கள் தமது பாரம்பரிய தொழிலாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுருக்கு வலையினை பயண்படுத்தியே மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தொழிலுக்குச் சென்ற தாழ்வுபாட்டு மீனவர்களில் 5 படகுகளைச் சேர்ந்த 25 மீனவர்களை கடற்படையினர் கடலில் வைத்து நேற்று   திங்கட்கிழமை (40) கைது செய்து தாழ்வுபாட்டு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மீனவர்கள் கைது செய்யப்பட்டதினை அறிந்து கொண்ட தாழ்வுபாட்டு கிராம மக்கள் அனைவரும் ஒன்று திறண்டு தாழ்வுபாட்டு கடற்படை முகாமை நோக்கி சென்று  மீனவர்களின் கைது தொடர்பில் தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்ததோடு அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரி இருந்தனர்.

இந்த நிலையில் அங்கு வந்த பொலிஸார் குறித்த மீனவர்களை நேற்று   திங்கட்கிழமை(4) மாலை பொறுப்பேற்று மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்ததோடு,இன்றயை தினம்(செவ்வாய்க்கிழமை) 5 காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் குறித்த 25 மீனவர்களும் இன்று செவ்வாய்க்கிழமை(5) காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகியிறுந்தனர்.

இதன் போது குறித்த 25 மீனவர்களும் மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரத்தை தம் வசம் வைத்திருக்காததன் காரணத்தினாலேயே அவர்கள் கைது செய்யப்படுள்ளதாக கடற்படையினர் மன்றில் தெரிவித்திருந்தனர்.

 விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் எவ்வித நிபந்தனைகளும் இன்றி குறித்த மீனவர்கள் 25 பேரையும் விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.


மன்னார் தாழ்வுபாட்டு கடலில் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும் விடுதலை- Reviewed by Author on December 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.