அண்மைய செய்திகள்

recent
-

512 வயதான சுறா கண்டுபிடிப்பு: தற்போதுவரை உயிருடன் இருக்கும் அதிசயம் -


உலகிலேயே தற்போது வரை வாழ்ந்துகொண்டிருக்கும் முள்ளந்தண்டுள்ள விலங்குகளில் அதிக ஆயுட்காலத்தை உடையது என கருதப்படும் சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வட அட்லாண்டிக் கடற்பிரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சுறாவின் வயது 512 என மதிப்பிடப்பட்டுள்ளது. தனது PhD பட்டப் படிப்பிற்கான ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்காக கிறீன்லாந்து சுறாக்கள் பற்றிய ஆய்வினை Julius Nielsen என்பவர் மேற்கொண்டுள்ளார். இதன்போதே குறித்த அதிக வயதுடைய சுறா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 18 அடிகள் நீளமானதாக இருக்கும் இச் சுறா 1505 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பிறந்திருக்கும் என தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் இவ் வருடத்தின் ஆரம்பத்தில் நோர்வே நாட்டின் ஆர்ட்டிக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் Kim Praebel என்பவர் ஆய்வு ஒன்றின்போது 400 வயதுகளை உடைய கிறீன்லாந்து சுறா ஒன்றினை கண்டுபிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
512 வயதான சுறா கண்டுபிடிப்பு: தற்போதுவரை உயிருடன் இருக்கும் அதிசயம் - Reviewed by Author on December 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.