அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவில் தடம் புரண்டு சாலையில் விழுந்த ரயில்: 6 பேர் பலி, 77 பேர் காயம் -

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ரயில் தடம்புரண்டு, சாலையில் விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 70கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் சியாட்டிலிலிருந்து போர்ட்லேண்டிற்கு 78 பயணிகள் மற்றும் 5 ரயில் குழுவோடு தன் முதல் பயணத்தைத் தொடங்கிய இந்தப் புது ரயில், தன் முதல் ஓட்டத்திலேயே பெரும் விபத்தை சந்தித்துள்ளது.
பாலத்தின் மேல் ஓடிய ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டு, நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள் எவரும் இறக்கவில்லை என்றபோதும், ரயிலில் இருந்த பயணிகளில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ரயில் விபத்தானது உள்ளூர் நேரப்படி காலை 7.40 மணியளவில் நடந்துள்ளது. விபத்து நடக்கும் சமயத்தில் ரயில் 130 கி மீ வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

நெடுஞ்சாலையை ஒட்டி இந்த அதிவேக ரயில் இயக்கப்படுவது ஆபத்தானது என அந்தப் பகுதியைச் சேர்ந்த பலரும், இந்த மாத தொடக்கத்திலேயே கருத்து தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் மற்றும் மீட்பு குழுவினர் துரிதமாக செயல்பட்டு உடல்களை மீட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி டிரம்ப், கட்டுமான பணிகள் குறித்து விமர்சித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் எந்த ஒரு கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




அமெரிக்காவில் தடம் புரண்டு சாலையில் விழுந்த ரயில்: 6 பேர் பலி, 77 பேர் காயம் - Reviewed by Author on December 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.