அண்மைய செய்திகள்

recent
-

காலையில் மட்டும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்! -


ஒருசில உணவுகளை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமான செயல்பாட்டை பாதித்து இரைப்பையில் ஆரோக்கியத்தை குறைத்துவிடும்.
பழச்சாறு
காலையில் வெறும் வயிற்றில் பழச்சாறு குடிப்பது ஆரோக்கியமானது அல்ல. ஏனெனில் பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் உள்ள சர்க்கரை, கல்லீரலை பாதித்து, வயிற்றின் சுமையை அதிகமாக்கி, வயிறு தொடர்பான கோளாறுகளை உண்டாக்கிவிடும்.

இனிப்பு மற்றும் காரங்கள்
இனிப்பு மற்றும் கார பலகாரங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நம் உடலின் ஆரோக்கியத்திற்கு கெடுதலை விளைவிக்கும். எனவே அவற்றை தவிர்க்க வேண்டும்.

குளிர்பானங்கள்
வெறும் வயிற்றில் குளிர்பானங்களை பருகுவதும் நல்லதல்ல. ஏனெனில் அதில் உள்ள அமிலங்கள் வயிற்றில் இருக்கும் அமிலங்களுடன் சேர்ந்து குமட்டல், வாய்வு தொல்லை, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி ஒருவித மந்தமான உணர்வை உண்டாக்கும்.

சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, கொய்யா போன்ற சிட்ரஸ் பழ வகைகளை கூட வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அவை செரிமானத்தை தாமதப்படுத்துவதோடு வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

காஃபி
காலையில் உறங்கி எழுந்ததும் காபி பருகுவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் காஃபியை வெறும் வயிற்றில் பருகும் போது, இரைப்பை அழற்சி ஏற்படுத்தி, செரிமான கோளாறு பிரச்சனையையும் உண்டாக்கும்.
காலையில் மட்டும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்! - Reviewed by Author on December 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.