அண்மைய செய்திகள்

recent
-

அடிக்கடி சுடு தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதா? -


நம்மில் பலரும் நோய் வந்தால் மட்டுமே வெந்நீர் பருகும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம். ஆனால் தினமும் வெந்நீர் பருகி வந்தால் கிடைக்கும் பயன்களை பார்க்கலாம்.
  • உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள் தினமும் காலையில் சுடுதண்ணீரில் எலுமிச்சையை கலந்து பருகினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
  • அளவுக்கு அதிகமாக உணவு, எண்ணெய் பலகாரம், இனிப்பு, போன்றவை சாப்பிட்டால் சில நேரங்களில் நெஞ்சு கரிக்க தொடங்கும்.
  • அப்போது ஒரு டம்ளர் வெந்நீரை எடுத்து பருகினால் கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய்விடும், உணவும் செரித்து விடும்.
  • மேலும் தினமும் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் பருகினால் மலச்சிக்கல் தீரும். இரவு தூங்குவதற்கு முன் பருகினால் புளித்த ஏப்பம், வாயுப்பிடிப்பு ஆகியவை நீங்கிவிடும்.
  • வெந்நீர் பருகுவதால் உடலில் இருந்து வேர்வை அதிகமாக வெளியேறும். அதனுடன் சேர்ந்து உடலில் உள்ள நச்சுகளும் வெளியேறி உடல் சுத்தமாகும்.
  • வெந்நீர் பருகுவது முடி உதிர்வை குறைத்து முடியின் வளர்ச்சிக்கு உதவி செய்யும். தலையில் உள்ள பொடுகையும் கட்டுபடுத்தும்.
  • முக்கியமாக, வெந்நீர் பருகுவதால் உடலில் ரத்தஓட்டம் சீராகும்.
  • இதன் மூலம் நரம்பு மண்டலங்களின் செயல்பாடு மேம்படும். மேலும், வெந்நீர் அருந்துவது மூலம் உடலில் நச்சுகள் வெளியேறுவதால் வயதின் காரணமாக ஏற்படும் முதிர்ச்சி தள்ளிப்போடப்படும்.
  • தினமும் வெந்நீர் பருகுங்கள், உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.
அடிக்கடி சுடு தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதா? - Reviewed by Author on December 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.