அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கள்ளியடி மின்னங்கட்டுப்பாலம் புனரமைக்கப்படுமா……????

மன்னார் மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கள்ளியடிக்கிராமத்தின் ஊடே செல்லுகின்ற மின்னங்கட்டுப்பாலம் இன்னும் மறுசீரமைக்கப்படாமல் நீண்டகாலமாக உள்ளது மக்கள் பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

மன்னாரில் இருந்து சங்குபிட்டி ஊடக யாழ்ப்பாணம் செல்லும் பிரதான பாதையாகவுள்ளது. இடையில் (பள்ளமடு-விடத்தல் தீவு சவேரியார்புரம் அந்தோனியார்புரம்) பலகிராமங்கள் உள்ளன மின்னங்கட்டுப்பாலம் எனவும் கள்ளியடிப்பாலம் எனவும் அழைக்கப்படுகின்றது.
சுட்டபிட்டி முத்துமாரியம்மன் ஆலயத்திற்கும் ஜயனார் சுவாமி ஆலயத்திற்கும் இராணுவத்தினரின் படைத்தளமும்  அருகில் உள்ளது.

இப்படைத்தளத்துடன் முடிவடையும் பிரதான பாதையின் தொடர்ச்சி மின்னங்கட்டுப்பாலம் தொடங்குகின்றது நீண்ட நாட்களாக புனரமைக்கப்படாமல் உள்ளதுடன் இப்பகுதி வளைவு செம்மன்பாதையாகவுள்ளது.

 இப்பாதையானது குண்டும் குழியுமாகவுள்ளதாலும் அந்தவளைவில் மரங்கள் உள்ளதாலும் வாகனப்போக்குவரத்து பயணம் மிகவும் சிரமமாகவுள்ளதாக பயணிகளும் சாரதிகளும் மக்களும் தெரிவிக்கின்றனர்.

மண்டக்கல்லாறு அருவியாறு பாலங்கள் தொடர்சிசியாக வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் மின்னங்கட்டுப்பாலம் கட்டுமானப்பணிகள் தொடங்குவதற்கு முன்பாக அந்த வளைவுப்பகுதியில் பயணத்திந்கு தடையாக உள்ள முள்ளு மரங்களை வெட்டுவதோடு குண்டும் குழியுமாக இருக்கின்ற பாதையினை செப்பணிட்டுத்தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை மக்களும் பயணிகளும் சாரதிகளும் கேட்டு நிற்கின்றனர்.

மழைகாலம் என்பதால் விபத்துக்கள் இன்றி இலகுவான பயணத்திற்கு வழியமைத்து தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 எமது வேண்டுகோள் நிறைவேற்றப்படுமா……..???

-மன்னார்விழி-











மன்னார் கள்ளியடி மின்னங்கட்டுப்பாலம் புனரமைக்கப்படுமா……???? Reviewed by Author on December 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.