அண்மைய செய்திகள்

recent
-

விண்வெளியில் முதல் முறையாக எந்த பிடிமானமும் இல்லாமல் பறந்த நாசா வீரர் மரணம்


விண்வெளியில் முதல் முறையாக எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் பறந்த நாசா வீரர் புரூஸ் மெக்கண்டில்ஸ் மரணம் அடைந்தார்.

நாசாவைச் சேர்ந்த புரூஸ் மெக்கண்டில்சின் ஒரு புகைப்படம் 1984-ம் ஆண்டு வெளியிடப்பட்டு மிகவும் புகழ் பெற்றது. அந்த புகைப்படத்தில் புரூஸ் விண்வெளியில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் பயணம் செய்வார். விண்வெளியில் பிடிமானம் இல்லாமல் பயணம் செய்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில், புரூஸ் மெக்கண்டில்ஸ் கலிபோர்னியாவில் மரணமடைந்ததாக நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அவர் தனது 80வது வயதில் உயிரிழந்துள்ளார்.

அவரை பெருமைப்படுத்தும் விதமாக அவரின் சாதனை நிமிடங்களை நாசா வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவர் விண்வெளியில் வலம் வந்த புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு உள்ளது. அவரின் இந்த புகைப்படம் விண்வெளி வரலாற்று பக்கங்களில் சிறந்த பக்கமாக அமையும் என்று புகழாரம் சூட்டியுள்ளது.


விண்வெளியில் முதல் முறையாக எந்த பிடிமானமும் இல்லாமல் பறந்த நாசா வீரர் மரணம் Reviewed by Author on December 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.