அண்மைய செய்திகள்

recent
-

2018 ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட முதல் 10 வீரர்களின் பட்டியல் வெளியானது


இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் இந்தாண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ளது.
இதற்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இதில் தொடர்ந்து ஒரே அணியில் விளையாடி வந்த வீரர்கள் இந்தாண்டு வேறு அணிகளுக்கு சென்றுள்ளனர்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த அஸ்வின் இந்தாண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு சென்றுள்ளார். இதே போன்று பல வீரர்கள் அணி மாறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்ற வீரர்களில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
முதல் 10 இடங்களை பிடித்த வீரர்களின் பட்டியல்
  • பென் ஸ்டோக்ஸ் - ரூ. 12.50 கோடி(ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • ஜெய்தேவ் உனத்கத் - ரூ. 11.50 கோடி(ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • மணீஷ் பாண்டே - ரூ. 11 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் )
  • கே.எல்.ராகுல் - ரூ . 11 கோடி (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
  • கிறிஸ் லின் - ரூ. 9.60 கோடி (கொல்கத்தா)
  • மிட்சல் ஸ்டார்க் - ரூ. 9.40 கோடி (கொல்கத்தா)
  • கிளன் மேக்ஸ்வெல் - ரூ. 9 கோடி (டெல்லி டேர்டெவில்ஸ்)
  • ரசித் கான் அர்மான் - ரூ. 9 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
  • குணால் பாண்டியா - ரூ. 8.8 கோடி (மும்பை)
  • சஞ்சு சாம்சன் - ரூ. 8 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)
2018 ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட முதல் 10 வீரர்களின் பட்டியல் வெளியானது Reviewed by Author on January 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.