அண்மைய செய்திகள்

recent
-

அழகாய் காட்சியளிக்கும் திருக்கேதீஸ்வர பாலாவிதீர்த்தக்கரை....படங்களுடன்


இந்து சமுத்திரத்தின் முத்து இரத்னதீபம் இலங்கை திருநாட்டிலே
வடக்குமாகாணத்திலுள்ள திருக்கேதீஸ்வரம் திருத்தலமானது சிவபூமி மன்னார் மாவட்டத்தில் மாதோட்ட என்னும் இடத்தில் சூழமைவினைக் கொண்டு காணப்படுகின்றது. 
இத்தலமானது பாடல்பெற்ற திருத்தலமாகும். நயன்மார்களின் வாழ்வியல் நுட்பங்கள் அனுகுமுறையினையே பின்பற்றுகின்றனர் இந்துக்கள் காரணம், அவர்கள் பாடிய பாடல்களின் அடிப்படையில் இந்துக்கள் தமது வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். இங்குள்ள சிவபெருமானை துதித்து சம்பந்தர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார்கள் தங்கள் பதிகங்களில் கூறப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றது. 

சம்பந்தர் பாடிய விருது குன்றமா மேருவில் நாணற என்று தொடங்கும் பதிகத்தில் மாதோட்டத்தின் கடற்கரை அமைவிடச் சிறப்புப் பற்றியும்,

கனைகடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டங்....
....இருங்கடற் கரையினில் எழில்திகழ் மாதோட்டம்....
....இச்சையி னுழல்பவர் உயர்தரு மாதோட்டத்....
....வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்

மறிகடல் மாதோட்டத்....
....வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர்
மலிகடல் மாதோட்டத்....
...வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற
மருவிய மாதோட்டக்....
....வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை
நடமிடு மாதோட்டந்.... ....கடல்வாயப்
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்....
....மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா
தோட்டநன் னகர்மன்னித்.....
....மாதோட்டத்
தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்....
....முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்ட..

சுந்தரமூர்த்தி நாயனாருடைய நத்தார்படை ஞானன் என்று தொடங்கும் பதிகத்திலும்
வரியசிறை வண்டியாழ்செயும் மாதோட்டநன் னகருட்....
....வையம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்....
....வானத்துறு மலியுங்கடல் மாதோட்டநன் னகரிற்....
....மட்டுண்டுவண் டாலும்பொழில் மாதோட்டநன் னகரிற்....

....மாவின்கனி தூங்கும்பொழில் மாதோட்டநன் னகரிற்....
....கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருட்....
....வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்..
இதில் மாதோட்டத்தின் சூழமைவினை விளக்குகின்றது.

தற்பொழுது காணப்படும் வாய்க்கால்கள் குறிப்பாக கடற்கரையினை அண்டிய பிரதேசத்தில் காணப்படும் நீர்வடிகாலானது புராதன வியாபாரம் நடைபெற்ற காலத்தினை குறிப்பிடுவதாகவும் (முழுமையான ஆய்வுகள் நடந்தவண்ணமுள்ளது.) காணப்படுகின்றது.

ஆலயத்தின் ராஜகோபுரத்தின் முன்னே 400மீற்றர் தொலைவில் காணப்படும் நீர்தடாகம் இது அமைக்கப்பட்டது. 2009இன் பின்னர்
பாவம் வினையறுப்பான் பயில் பாலாவியின் கரைமேல்... இக் குளமானது பாலாவிதீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. நாம் பாவங்களை செய்து தீர்த்தோம் இறைவா இனியும் செய்யாதிருக்கவும் செய்தவையினை முடிவுறுத்துவதற்குமாக தீர்த்ததை இந்துக்கள் ஏற்கின்றனர்.

வருகின்ற 13-02-2018 மகாசிவராத்திரி பெருவிழா நடைபெறவுள்ளது வழமைபோல் மகாலிங்கப்பெருமானுக்கு பாலாவித்தீர்த்த திருமுழுக்கு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 கடந்த சிலமாதங்களுக்கு முன் பாலாவியினை சுத்தம் செய்து துப்பரவுப்பணிகள் நடைபெற்று முடிவுற்றவேளை வருணபகவானின் செயலால் பாலாவியானது நீரினால் நிறைந்து அழகாக காட்ச்சியளிக்கின்றது வறண்டு கிடந்த நிலங்களில் வான்மழையினால் வளம் கொஞ்சம் பசுமையாக இருக்கின்றது.
திருவிழாக்காலங்களில் இந்துக்கள் மட்டுமல்லாது பலபாகங்களில்  இருந்து  ஏனைய சமயத்தினரும் வருகை தருவது வழக்கம் இந்துக்களால் மிகவும் புனிதமாக மேற்கொள்ளப்படும் பாலாவித்தீர்த்தக்கரையில்
பொதுவாக நீராடி  தீர்த்தம் கொண்டு செல்வது வழக்கம் அத்தருணத்தில் அறிந்தும் அறியாமலும்
  • சில பக்தடியார்கள் நீராடும் போது சோப்பு-ஷ்ம்போ போன்றவற்றினை பாவித்தலும் 
  • சிலர் விளையாடுதலும் சிறு மீன்பிடித்தல் ஏனைய அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுவதினை தவிர்க்கப்பட வேண்டும்.
 அத்தோடு பொழுதுபோக்கும் இடமல்ல களியாட்ட நிகழ்வுகளையும் தவிர்த்து  பக்தியுணர்வுடன் நாமும் நடந்து பிறரையும் அவ்வாறே நடப்பதற்கு உதவி செய்ய வேண்டும். பழமையும் புனிதமும் கொண்ட திருக்கேதீஸ்வர பாலாவிதீர்த்தக்கரை பேணுவோம்.
எம்மதமாய் இருப்பினும் அம்மதத்தினை எம்மதமாய் எண்ணி மதிப்போம் -அப்போது  எல்லோரும் புனிதமடைவோம்.


-வை-கஜேந்திரன்-

































அழகாய் காட்சியளிக்கும் திருக்கேதீஸ்வர பாலாவிதீர்த்தக்கரை....படங்களுடன் Reviewed by Author on January 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.