அண்மைய செய்திகள்

recent
-

மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கூற்றை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது-சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.(PHOTOS)



இன்றைக்கு எங்களுடைய மக்களுடைய விவசாய பண்ணைகளில்  இராணுவத்தினர் தமது குடும்பங்களினுடைய வாழ்வாதாரமாக இந்த பண்ணைகளை பயண்படுத்தி வருகின்ற போது எப்படி ஜனாதிபதியினுடைய கூற்றை நான் ஏற்றுக்கொள்வது? எனவே ஜனாதிபதியினுடைய கூற்றை நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின்  அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(26) மாலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

வடக்கு கிழக்கில் 80 வீதமான காணிகள் இராணுவத்திடம் இருந்து மீட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அண்மையில் கூட்டம் இன்றில் உரையாற்றி இருந்தார்.

குறித்த செய்தியை அறிந்த நிலையில் ஜனாதிபதிக்கு நான் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தேன்.உங்களுடைய கூற்றில் உண்மை இல்லை.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு கிட்டத்தட்ட 65 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இராணுவத்தின் வசம் இருந்தது.

தற்போது  54 ஆயிரம் ஏக்கர் நிலம் இராணுவ வசம் உள்ளது.

அப்படியாக இருக்கின்ற காரணத்தினால் எப்படி நீங்கள் 80 வீதமான காணிகளை மக்களிடம் ஒப்படைத்து விட்டீர்கள் என்பது தொடர்பிலும், உங்களுடைய கூற்றை நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தேன்.

அதில் நான் சில விடையங்களை குறிப்பிட்டிருந்தேன்.

குறிப்பாக எங்களுடைய மக்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்குகின்ற விவசாயப்பண்ணைகள் நீண்ட காலமாக இராணுவத்தினருடைய வசம் இருப்பதினால் எங்களுடைய மக்கள் வாழ்வாதார ரீதியாக மிகவும் பாதீக்கப்பட்டுள்ளனர்.

விவசாயப் பண்ணைகளுடைய  ஒரு சில விபரங்களையும் அதில் நான் குறிப்பிட்டிருந்தேன். குறிப்பாக முழங்காவில், கயூ பாம், வெள்ளங்குளம் விவசாய பண்ணை, கிளிநொச்சியில் இருக்கின்ற தென்னம் பண்ணை,விசுவமடுவில் இருக்கின்ற விவசாயப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு விவசாய பண்ணைகள் இராணுவத்தினர் வசம் இருக்கின்றது.

இன்றைக்கு எங்களுடைய மக்களுடைய விவசாய பண்ணையில் இராணுவத்தினர் தமது குடும்பங்களினுடைய வாழ்வாதாரமாக இந்த பண்ணைகளை பயண்படுத்தி வருகின்ற போது எப்படி உங்களுடைய கூற்றை நான் ஏற்றுக்கொள்வது? எனவே உங்களுடைய கூற்றை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அவருக்கு நான் எழுத்து மூலம் தெரிவித்திருந்தேன்.

இன்று ஜனாதிபதியினுடைய கட்சியைச் சார்ந்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள் கூறுகின்றார் சர்வதேச நீதிபதிகளை இலங்கையினுடைய போர்க்குற்ற விசாரனைக்கு அனுமதிக்க மாட்டோம் என்று.

-2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றிய ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை இந்த அரசாங்கம் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முதல் சகல விடையங்களையும் உள்ளடக்கி இந்த அரசாங்கம் செய்யாது விட்டால் இந்த அரசாங்கம் மிகப்பெரிய தொரு பாதகமான ஒரு நிலைக்கு செல்லும்.

இந்த அரசாங்கத்திற்கு எதிராக முழுவிதமான நடவடிக்கையும் எடுப்பதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்றைக்கும் பின் நிற்காது என அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கூற்றை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது-சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.(PHOTOS) Reviewed by Author on January 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.