அண்மைய செய்திகள்

recent
-

மாளிகைப்பிட்டி கிராமத்தில் உள்ள சில குடும்பங்களை வெளியேறிச் செல்லுமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பலவந்தப்படுத்துவதாக மக்கள் விசனம்.-(படம்)

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மாளிகைப்பிட்டி கிராமத்தில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்ற சில குடும்பங்களை அங்கிருந்து வெளியேறிச்செல்லுமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பாதீக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாளிகைப்பிட்டி கிராமத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக  மேலாக சுமார் 69 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

எனினும் குறித்த கிராமத்தில் 2 ஆயிரமாம்  ஆண்டிற்கு மேற்பட்ட தொல்பொருள் பெறுமதியான கட்டிடம் ஒன்று குறித்த பகுதியில் காணப்படுவதாக தொல்பொருள் திணைக்களம் தமக்க அறிவித்துள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

-இதனால் குறித்த பழமை வாய்ந்த இடிபாடுகளுடன் காணப்படுகின்ற கட்டிடத்தில் இருந்து சுமார் 500 மீற்றருக்குள் வசித்து வரும் மக்களை அங்கிருந்து வெளியேறிச்செல்லுமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தம்மை பலவந்தப்படுத்தி வருவதாக பாதீக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து சென்று பின் மீண்டும் தமது கிராமத்தில் வந்து மீள் குடியேறியுள்ளதாகவும், யுத்தத்தின் போது தமது வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தற்போது தாம் புதிய வீடுகளை அமைத்து வாழ்ந்து வருகின்ற நிலையில் தம்மை அங்கிருந்து வெளியேறிச் செல்லுமாறு தொல் பொருள் திணைக்கள அதிகாரிகள் தம்மை நாளாந்தம் பலவந்தப்படுத்தி வருவதாகவும் அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் இது வரை எவ்வித பலனும்   கிடைக்கவில்லை என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது தமது வீட்டு வளாகத்தினுள் பயண் தரும் மரங்களை நாட்டவும் அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர்.

வீட்டுத்தோட்டம் மற்றும் பயண்தரும் மரங்களை தமது வீட்டு வளாகத்தினுள் நாட்ட அனுமதிக்காமையினால் தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள காணிக்கான அனுமதிப்பத்திரம் உள்ள போதும்,தொல் பொருள் திணைக்கள அதிகாரிகள் தம்மை அங்கிருந்து வெளியேற்ற முயற்றிப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே உரிய அதிகாரிகளும்,அரசியல் வதிகளும் குறித்த விடையத்தில் தலையிட்டு உரிய தீர்வை பெற்றத்தருமாறு அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போல் நிஷந்தன்



















மாளிகைப்பிட்டி கிராமத்தில் உள்ள சில குடும்பங்களை வெளியேறிச் செல்லுமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பலவந்தப்படுத்துவதாக மக்கள் விசனம்.-(படம்) Reviewed by Author on January 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.