அண்மைய செய்திகள்

recent
-

கைநீட்டி சம்பந்தன் கேட்ட ஒரு கேள்வி! வாயடைத்துப்போன அரசியல் தலைவர்கள் -


பாதுகாப்பு தரப்பினரின் மறுசீரமைப்புத்தான் இலங்கைக்கு சவாலாக இருக்கும் என்று மனித உரிமை உயர்ஸ்தானிகர் தன்னிடம் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“ஒரு நாட்டின் நிலை மாறும் போது, அட்டூழியங்களைச் செய்த ஆயுதப்படையினர் மாறுவதில்லை. அரசியல் தலைவர்கள் மட்டுமே மாறுகின்றார்கள். ஆகவே நாட்டின் அரசியல் நிலை மாறும் போது அதை மறுசீரமைப்பது இலகுவான விடயம் இல்லை.

எந்த நாட்டிலும் இது சீராக செய்யப்படவில்லை. இலங்கையிலும் இதே பிரச்சினைதான் உள்ளது என்று மனித உரிமை உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற போரை கொடுமையாக நடத்தி முடித்த இராணுவம் தான் இன்னும் இருக்கின்றது.
அரசாங்கத்தில் உள்ளவர்கள் மாறினாலும், இராணுவம் மாறவில்லை. அந்த மாற்றத்திற்கு காலம் வேண்டும். “இனப்படுகொலை” என்ற பதத்தை முதலில் கூறியது நானே. ஒரு நீதிமன்ற விசாரணையில் இதை நிரூபிப்பது மிகவும் கஸ்டம்.
இதனை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் ஒத்துக்கொண்டுள்ளார். அண்மையில் கி.துரைராசசிங்கத்தின் கடிதம் தொடர்பில் வெளிவந்த சர்ச்சைகளையடுத்து முதலமைச்சருக்கு இது தொடர்பில் விளக்கினேன்.

இப்போதுதான் அவரும் அதை உணர்ந்துகொண்டுள்ளார். உலகில் நிரூபிப்பதற்கு மிகவும் கஸ்டமான ஒரு குற்றவியல் நிகழ்வே இனப்படுகொலை. தென்னிலங்கை அரசியலைப்பொருத்தவரை நாம் யாரையும் நம்பவில்லை. அப்படி சொன்னதும் இல்லை.
ஆனால் அவர்களை பயன்படுத்தி அவர்கள் மூலமாக தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும் என்றே நாம் நம்புகின்றோம். மகிந்த ராஜபக்ஸவை வைத்து இதை செய்ய முடியாது.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் மூலம் செய்யலாம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரப்பகிர்வில் நம்பிக்கையுள்ளவர். பொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற்றவேண்டும் என்றால் இந்த பிரச்சினைகளை முதலில் முடிக்க வேண்டும். இதுவே பிரதமர் ரணிலின் நிலைப்பாடு.
அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிப்பது நாமே. ஆகவே கனடாவை விட கூடுதலான சமஸ்டியைத்தான் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கியுள்ளோம். அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிப்பது நாமே.
அவர்கள் தருவதை வாங்குவது என்ற சொற்பதம் தற்போது இல்லை. அண்மையில் இடம்பெற்ற அரசியலமைப்பு வழிநடத்தல் கூட்டத்தில் ஒரு இறுக்கமான நிலை ஏற்பட்டது.

அப்போது சம்பந்தன் ஐயா திடீரென ஒரு கேள்வியை கேட்டார். இந்த நாட்டில் இருந்து ஒரு சதத்தையேனும் களவாடி இருக்கின்றேனா? என கேட்டார். அதற்கு அனைவரும் இல்லை என்று கூறினார்கள்.
தொடர்ந்து இரண்டாவது கேள்வியை கேட்டார். “உங்களில் யாராவது இந்த கேள்வியை கேட்பீர்களா?” என பிரதமர் ரணில் உட்பட அனைவரையும் கை நீட்டி காட்டி கேட்டார். இதற்கு அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.
ஆகவே நாம் கேட்டதை தர வேண்டும். அதற்கு எனக்கு உரிமையுண்டு எனவும் சம்பந்தன் குறிப்பிட்டதாக” சுமந்திரன் குறித்த ஊடகத்திடம் மேலும் தெரிவித்துள்ளார்.
கைநீட்டி சம்பந்தன் கேட்ட ஒரு கேள்வி! வாயடைத்துப்போன அரசியல் தலைவர்கள் - Reviewed by Author on January 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.