அண்மைய செய்திகள்

recent
-

1300 ஆண்டு பழமை வாய்ந்த கோயிலில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து -


திபெத்தில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்த மத கோயிலில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திபெத் தலைநகர் லாசாவில் ஜோகாங் என்னும் கோயில் உள்ளது, இது 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்த மதத்திற்கான புனித கோவிலாகும். இந்த கோயிலில், புத்தரின் 12 வயது உருவ சிலை உட்பட பல்வேறு கலாச்சார பொக்கிஷங்கள் உள்ளன.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள், இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்றிரவு இந்த கோயிலில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால், உண்டான புகை மூட்டம் அப்பகுதி முழுவதும் பரவியது. இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள், போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் கோயிலுக்குள் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை, இதனால் வருங்காலத்தில் கோயிலின் நிலை பற்றிய அச்சம் எழுந்துள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு, ‘உலக பாரம்பரிய தலம்’ என யுனெஸ்கோவினால் இந்த கோயில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1300 ஆண்டு பழமை வாய்ந்த கோயிலில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து - Reviewed by Author on February 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.