அண்மைய செய்திகள்

recent
-

4 கோடி மாடுகளுக்கு ஆதார் அட்டை -


இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்க எண்களை உடைய ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதே போல் ரூ.50 கோடி செலவில் சுமார் 4 கோடி மாடுகளுக்கான ஆதார் அட்டையை தயார் செய்யும் பணியை முதற்கட்டமாக துவக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக இந்த வருட மத்திய பட்ஜெட்டில் 50 கோடி ரூபாய் ஒதுக்கி மத்திய அமைச்சர் அருன் ஜெட்லி அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடதக்கது.
இந்த முறையில் மனிதர்களை போல மாடுகளின் உயிரியல் விவரங்கள், வயது, பாலியல் மற்றும் உடல் குறிகள் ஆகியவற்றை கொண்டு மாடுகளை வேறுபடுத்தி ஒவ்வொரு மாட்டிற்கும் தனித்தனி 12 இலக்க ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும். இதற்காக ஒரு மாட்டிற்கு சுமார் 8 முதல் 10 ரூபாய் வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இறைச்சிக்காக கடத்தப்படும் மாடுகளை தடுக்கவும் இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருவாயை 2022 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியே மாடுகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் நடைமுறை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர்.
4 கோடி மாடுகளுக்கு ஆதார் அட்டை - Reviewed by Author on February 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.