அண்மைய செய்திகள்

recent
-

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விபத்து: பயங்கர தீயிலும் கருகாத நந்தி மாலை


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தின் போது, அந்த தீயிலும் நந்தி சிலையின் கழுத்தில் இருந்த மாலை கருகாமல் இருப்பதைக் கண்டு பக்தர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து சுந்தரேசுவரர் சுவாமி சன்னதி செல்லும் வழியில் வீரவசந்தராயர் மண்டபமும், ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன.
அந்த பகுதியின் இருபுறங்களிலும் 50-க்கும் மேற்பட்ட கடைகள் இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே உள்ள ஒரு கடையில் இருந்து புகை வருவதை பாதுகாப்பு பணியில் இருந்த பொலிசார் பார்த்தனர்.

உடனே அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து தீயணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் பாதிப்புக்குள்ளானதில், 36 கடைகள் எரிந்து சாம்பலாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தீ விபத்தின் போது வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் சேதமடைந்தது.
வீரவசந்தராயர் மண்டபத்தில் சாமி சன்னதியை நோக்கி நந்தி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நந்தியைச் சுற்றி கட்டப்பட்டுள்ள தொட்டியானது மழைச்சடங்கோடு தொடர்புடையது.
நாட்டில் மிக வறட்சி ஏற்படும் காலங்களில் மழை வேண்டி ஜபம் செய்வதும், கூட்டு வழிபாடு, ஹோமம் செய்வதும் இங்கு பிரசித்தம்.
அப்போது நந்தியை சுற்றி உள்ள தொட்டியில், நந்தி மூழ்கும் அளவிற்கு நீரினை நிரப்புவர். அன்று முழுவதும் மழைக்காக பிரார்த்திக்கப்படும். இதனால் நந்திக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மழை பொழிய செய்வார் என்பது நம்பிக்கை.

இதையடுத்து தற்போது நந்தித் தொட்டி உள்ளிட்ட இப்பகுதி முழுவதும் தீ விபத்தின் காரணமாக சேதமடைந்தது பக்தர்களை வேதனையடையச் செய்தாலும் நந்திக்கோ, நந்தியின் கழுத்தில் போடப்பட்டிருந்த மாலைக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை, அதாவது மாலை கருகவில்லை.
இதைக் கண்ட பக்தர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
மேலும் இதன் காரணமாக மதுரை மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற நம்பிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விபத்து: பயங்கர தீயிலும் கருகாத நந்தி மாலை Reviewed by Author on February 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.