அண்மைய செய்திகள்

recent
-

திருவண்ணாமலையில் கடிதம் எழுதி கலெக்டரை சந்தித்த 9-ம் வகுப்பு மாணவி


திருவண்ணாமலையில் கடிதம் எழுதி சந்தித்த 9-ம் வகுப்பு மாணவியை தனது இருக்கையில் அமர வைத்து கலெக்டர் கலைந்துரையாடினார்.

திருவண்ணாமலையில் கடிதம் எழுதி கலெக்டரை சந்தித்த 9-ம் வகுப்பு மாணவி


திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி. இவர், பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் நலனுக்காகவும், உயர்கல்வி பெறுவதற்காகவும் நிதியுதவி அளித்து வருகிறார்.

இந்த நிலையில், கலெக்டரின் செயலை பாராட்டி வேங்கிக்கால் பொன்னுசாமி நகரை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி பூஜா கலெக்டரை சந்தித்து கலைந்துரையாட கடிதம் எழுதினார். கலெக்டர் மாணவியை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கி அனுமதி தந்தார். மாணவி பூஜா கலெக்டர் அலுவலகத்திற்கு தனது தாயுடன் வந்தார். கலெக்டர் கந்தசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து கூறி கலைந்துரையாடினார்.

அப்போது, 9-ம் வகுப்பு படிக்கும் போதே தனக்கு கீழ் வகுப்பில் படிக்கும் சில மாணவ, மாணவிகளுக்கு டியூசன் எடுப்பதையும், அப்துல் கலாம் வழியில் சமூக சிந்தனையோடு மாணவி செயல்படுவதையும் அறிந்த கலெக்டர் மாணவியை பாராட்டினார்.

கலந்துரையாடலின் போது, ‘‘மாணவர்களே நாட்டின் மிகப்பெரிய சக்தி’’ என்று கூறிய அப்துல்கலாம் வழியை பின்பற்றுவதாக மாணவி கலெக்டரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியை ஊக்கப்படுத்திய கலெக்டர் கந்தசாமி, தனது இருக்கையில் மாணவி பூஜாவை அமர வைத்து பெருமைப்படுத்தினார்.

திருவண்ணாமலையில் கடிதம் எழுதி கலெக்டரை சந்தித்த 9-ம் வகுப்பு மாணவி Reviewed by Author on February 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.