அண்மைய செய்திகள்

recent
-

கனடாவில் உண்மையை அம்பலப்படுத்தி பிரபலமான தமிழ் பெண்!


கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

டொரொண்டோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி ஜெயரட்னம் என்ற தமிழ் பெண் தெரிவாகியுள்ளார்.
சுமார் 50 வீத புலம்பெயர் சிறுபான்மையினர்கள் வாழும் நகரமாக டொரொண்டோ விளங்குகிறது.

அபி ஜெயரட்னம் தலைமைத்துவ அறக்கட்டளையின் கட்டடக்கலைஞர் மற்றும் Centennial கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
மேலும் சமூக நீதி பற்றி மாணவர்களுக்கும் சமுதாய பங்குதாரர்களுக்கும் தேவையான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றார்.
தமிழ் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் அபி ஜெயரட்னம், கலப்பு ஊடக கலை மூலம் தமிழ் கதைகளை காப்பாற்றுவதற்கும், கதையளிப்பதற்கும் ஆர்வமாக உள்ளார்.

Jane மற்றும் Finchஇன் அகதி குடும்பத்தில் வளர்ந்தவர் தனது தனிப்பட்ட போராட்டங்களுடன் அணுகக்கூடிய ஒரு நகரத்தை உருவாக்குவதற்காக தன்னை அர்ப்பணித்து வருகின்றார்.
கல்வி தரம் மற்றும் பொறுப்பு அலுவலக சபையில் நியமிக்கப்பட்ட அபி, டொரொண்டோ இளைஞர் சமபங்கு தொடர்பான அமைப்பின் ஆலோசனைகளில் பங்கேற்று வருகிறார்.
பல்வேறு சமூக அரங்குகளில் பேசுகையில், கல்வி மூல பாதை தொடர்பான அவரது வேலைகள் மூலம் வறுமையின் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுகிறார், கல்வியை அணுக வேண்டியவர்களுக்கு உதவுகின்றார் மற்றும் இனவாதத்தின் எதிர்மறையான தாக்கங்களுக்கு ஏதிராக போராடி வருகின்றார்.

“Toronto is Failing Me” தொடரில், டொரொண்டோவில் அதிகரித்துவரும் வருமான இடைவெளியை அபி அம்பலப்படுத்தியதுடன், மாற்றத்தின் டொராண்டோவின் முதல் 30 தமிழ் பெண் முகவர்களில் ஒருவராக அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இதன் அவர் பிரபலமடைந்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
கனடாவில் உண்மையை அம்பலப்படுத்தி பிரபலமான தமிழ் பெண்! Reviewed by Author on February 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.