அண்மைய செய்திகள்

recent
-

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை தொட்ட இலங்கை அணி -


டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் குவித்த அணிகள் பட்டியலில் ஏற்கனவே முதலிடத்தில் உள்ள இலங்கை, மீண்டும் ஒரு மைல்கல்லை தொட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற இலங்கை - வங்கதேச அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இதன் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 713 ஓட்டங்கள் குவித்தது.
இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் எடுக்கப்பட்ட 18-வது அதிகபட்ச ஓட்டங்களாகும்.

இந்த பட்டியலில் முதலிடத்திலும் இலங்கை அணியே உள்ளது. கடந்த 1997-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் இலங்கை அணி 952 ஓட்டங்கள் குவித்தது.
இது தான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாகும்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை தொட்ட இலங்கை அணி - Reviewed by Author on February 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.