அண்மைய செய்திகள்

recent
-

உரிமையை நிலைநாட்ட....வாக்குரிமையை பயன்படுத்துங்கள்....வளமான வாழ்வுக்கு...படங்களுடன்



நாம் ஒவ்வொருவரும் விரும்பியோ.... விரும்பாமலோ....  அரசியலில் தான் இருக்கின்றோம் அரசியலை நாம் முறையாக அறிந்தால் நல்லவர்கள் ஆட்ச்சிக்கு வருவார்கள் அது நல்லசுபீட்சமான ஆட்ச்சியாக அமையும்....

ஜனநாயக ஆட்சியில் மக்களே ஆட்சியாளர்கள்

தற்கால சூழலில் மக்களே நேரடியாக ஆட்ச்சி செய்ய முடியாது  அதனால் தமது தேவைகளினை சேவையாக செய்யக்கூடிய  ஆளுமையுடையவர்களை  தமது பிரதிநிதிகளாக தேர்வு செய்கின்றார்கள் இதுவே அரசியல் பிரதிநிதி த்துவம்.


பிரதான பிரதிநித்துவ முறைகளான
பிரதேசவாரி  பிரதிநித்துவ முறை-இவை 03 வகையாகும்
  • எளிய பெரும்பான்மை முறை
  • அதிகப்பெரும்பான்மை முறை
  • விசேட பெரும்பான்மை முறை

விகிதாசார  பிரதிநித்துவ முறை -இவை 03வகையாகும்
  • பட்டியல் முறை
  • தனிமாற்று முறை
  • கலப்புத்தேர்தல் முறை
தற்போது ந்டைபெறும் தொகுதி மற்றும் விகிதாசார தேர்தலில் 74கோடி  செலவு உள்ளாதாக உள்ளூராட்ச்சி மாகாணசபைகளுக்கான அமைச்சர் பைசல் முஸ்தபா கூறியுள்ளார்
தெரிவு செய்யப்படும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு 15000 ரூபாவும்
நகரசபை மாநகர சபை  உறுப்பினர் ஒருவருக்கு 20000 ரூபாவும் மாதாந்த சம்பளமாக வழங்கப்படவுள்ளதோடு இதர செலவுகள் எல்லாமாக சேர்த்துகொள்ளலாம்.
  • ஜனாதிபதித்தேர்தல்
  • பாராளுமன்றத்தேர்தல்
  • மாகாண சபைத்தேர்தல்
  • உள்ளூராட்ச்சி சபைத்தேர்தல் 
  • தேர்தல்கள் ஒவ்வொன்றுக்கும் அதிகப்படியான மக்களின் நிதியே செலவாகின்றது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல தனிநபர் ஒருவருக்கும் தான் தேர்தல் நிதியினை நாட்டின் அபிவிருத்திகு பயன்படுத்தினால் எங்கள் நாடு எப்போதே மாபெரும் வளர்ச்சி கண்டிருக்கும்... 
வாக்காளர்களை விட வேற்பாளர்கள் அதிகமாகவுள்ள தேர்தல் தற்போது நடைபெறுகின்ற உள்ளூராட்ச்சி தேர்தல் பார்க்கலாம்...

இலங்கையில்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 43 அரசியல் கட்சிகள் மற்றும் 222 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்இவர்களில் இருந்து 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8 ஆயிரத்து 356 பேர் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 5 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேரிதலில் 86094 பேர் வாக்களிக்க தகுதி

மன்னார் மாவட்டத்தில்...............
  • மன்னார் நகர சபை 
  • மன்னார் பிரதேச சபை 
  • நானாட்டான் பிரதேச சபை 
  • முசலி பிரதேச சபை 
  •  மாந்தை மேற்கு பிரதேச சபை 
ஆகிய ஐந்து உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தலில் 54 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 94 வாக்கெடுப்பு நிலையங்களில் 86094 பேர் வாக்களிக்க இருக்கின்றனர்.

மன்னார் நகர சபை
இதன் அடிப்படையில் மன்னார் நகர சபைக்கு 7 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 14 வாக்கெடுப்பு நிலையங்களில் 14770 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர்.இதில்
  • எழுத்தூர் பிரிவில் 2879 வாக்காளர்களும்
  • சாவக்கட்டு பிரிவுக்கு 1906 நபர்களும்
  •  சவுத்பார் பிரிவில் 2342 பேரும்
  • பனங்கட்டுகொட்டு பிரிவில் 1592 நபர்களும்
  •  பெற்றா பிரிவில் 855 நபர்களும்
  • உப்புக்குளம் பிரிவில் 3073 பேரும்
  •  பள்ளிமுனை பிரிவில் 2123 வாக்காளர்களும் வாக்களிக்க இருக்கின்றனர்.

மன்னார் பிரதேச சபை
மன்னார் பிரதேச சபைக்கு 11 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 22 வாக்கெடுப்பு நிலையங்களில் 22468 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர் இதில்
  • தலைமன்னாரில் 1203 வாக்காளர்களும்
  •  தலைமன்னார் பியர் கிழக்கில் 2078 நபர்களும்
  •  துள்ளுக்குடியிருப்பு பிரிவில் 1022 பேரும்
  •  பேசாலையில் (முதலாம் வட்டாரம் முதல் ஏழாம் வட்டாரம் வரை) 1808 நபர்களும்
  • பேசாலை தெற்கு 1807 பேரும்
  •  சிறுத்தோப்பு பிரிவில் 2332 நபர்களும்
  •  புதுக்குடியிருப்பு பிரிவில் 1482 நபர்களும்
  • எருக்கலம்பிட்டி பிரிவில் 2888 வாக்காளர்களும்
  •  தாழ்வுபாடு பிரிவில் 2699 நபர்களும்
  • தாராபுரம் பிரிவில் 1560 நபர்களும்
  • உயிலங்குளம் பிரிவில் 3562 வாக்காளர்களும் வாக்களிக்க இருக்கின்றனர்.

நானாட்டான் பிரதேச சபை
நானாட்டான் பிரதேச சபைக்கு 8 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 23 வாக்கெடுப்பு நிலையங்களில் 15702 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர்.இதன் பிரகாரம்
  • வங்காலை வடக்கில் 1917 வாக்காளர்களும்
  •  வங்காலை பிரிவில் 2026 பேரும்
  • நானாட்டான் பிரிவில் 1678 நபர்களும்
  • வாழ்க்கைபெற்றான்கண்டல் பிரிவில் 2577 பேரும்
  •  இலுகடிப்பிட்டி பிரிவில் 2313 பேரும்
  • முருங்கன் பிரிவில் 2040 நபர்களும்
  •  கற்கடந்தகுளம் பிரிவில் 1202 பேரும்
  • கட்டையடம்பன் பிரிவில் 1999 வாக்காளர்களும் வாக்களிக்க இருக்கின்றனர். 
முசலி பிரதேச சபை பிரிவில்
முசலி பிரதேச சபை பிரிவுக்கு 10 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 14 வாக்கெடுப்பு நிலையங்களில் 14518 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். இவற்றில்
  • அரிப்பு மேற்கு பிரிவில் 877 வாக்காளர்களும் 
  • அரிப்பு கிழக்கு பிரிவில் 532 நபர்களும்
  •  பண்டாரவெளி பிரிவில் 1493 பேரும்
  • புதுவெளி பிரிவில் 894 நபர்களும்
  • சிலாபத்துறை பிரிவில் 1801 பேரும் 
  • அகத்திமுறிப்பு கூளாங்குளம் பிரிவில் 1846 நபர்களும் 
  • பொற்கேணி பிரிவில் 1299 பேரும் 
  • மருதமடுஇ வேப்பங்குளம் பிரிவில் 2073 நபர்களும் 
  • கொண்டச்சி பிரிவில் 1757 பேரும்
  • பாலைக்குழி பிரிவில் 1946 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். 
மாந்தை மேற்கு பிரதேச சபை
மாந்தை மேற்கு பிரதேச சபை பிரிவுக்கு 13 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 21 வாக்கெடுப்பு நிலையங்களில் 18636 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர்.
  • வெள்ளாங்குளம் பிரிவில் 1721 வாக்காளர்களும்
  • பெரியமடு பிரிவில் 2057 நபர்களும்
  • இலுப்பைக்கடவை பிரிவில் 1515 பேரும்
  •  விடத்தல்தீவு பிரிவில் 2126 நபர்களும்
  • நெடுங்கண்டல் பிரிவில் 1493 பேரும்
  • ஆட்காட்டிவெளி பிரிவில் 1501 நபர்களும்
  • அடம்பன் பிரிவில் 1504 பேரும்
  • வட்டக்கண்டல் பிரிவில் 1973 நபர்களும்
  • மடு பிரிவில் 1769 பேரும்
  • இரணைஇலுப்பைக்குளம் பிரிவில் 1308 பேரும்
  • காக்கியான்குளம் பிரிவில் 1669 வாக்காளர்களும் வாக்களிக்க இருக்கின்றனர்.

உள்ளூராட்சி சபைகளுக்கான 24 அதிகாரங்கள்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான பரபரப்புக்கள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்ற நிலையில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் பெருமளவானவர்களுக்கே உறுப்புரிமைக்கு இருக்கின்ற அதிகாரங்கள் குறித்த தெளிவற்ற நிலை தொடர்வதாக தெரியவருகிறது.
1987 ஆம் ஆண்டு 15 இலக்க பாராளுமன்ற சட்டமூலத்தின் பிரகாரம் 24 அதிகாரங்கள் உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன . இந்த அதிகாரங்களுக்கு உட்பட்டே செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

குறிப்பிட்ட அதிகாரங்கள் வருமாறு
  • சபைக்கு தேவையான பதவிகளை உருவாக்கிக்கொள்ளல்.
  • சபையின் தேவைக்காக பதவி அல்லது நியமனங்களை வழங்குதல் (பக்கச்சார்பு இல்லாதுஇ உறவினர்கள் பாராதுஇ ஊழல் இல்லாது நியமனங்களை வழங்கும் வாக்குறுதி )
  • சபையில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கள்.
  • தனது சேவையை சிறப்புச் செய்ய வேறு சபைகளுடன் ஒப்பந்தம் செய்தல்.
  • தனது சபை இடப்பரப்பிலுள்ள அசையும் அசையாத சொத்துக்கள்இ ஆதனங்களை குறித்த அமைச்சின் ஊடாக உரித்தாக்குதல். (இராணுவத்திடம் உள்ள பொதுக்காணிகளை மீட்கும் வாக்குறுதிஇ தனியார் காணிகளை விடுவிக்க வழக்கு தொடருதல் )
  • காணிஇ கட்டிடங்களை கொள்வனவு செய்தல்இ குத்தகைக்கு வழங்கல். (ஊழல் இல்லாது நடு நிலை பேணல் )
  • படகுச்சேவையை ஆரம்பித்தல் (தீவகங்களுக்கான மேலதிக படகுச்சேவை வழங்கும் வாக்குறுதி )
  • வேலைவாய்ப்பு திட்டங்களை ஒழுங்கமைத்தல்(மயானபராமரிப்பாளர்கள்இ சுத்திகரிப்பு தொழிலாளிகள் வேலைகள் )
  • பிரதேச பாடசாலைகளை திருத்துதல்இ பெயர் சூட்டுதல்இ தரம் உயர்த்தல்இ மூடல் அதிகாரம். (ஊழல் இல்லாது செயற்படும் வாக்குறுதிஇ பெயரை பிரதேச வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் பெயரை சூட்டில் வாக்குறுதி )
  • தனது நிதியத்திலிருந்து சிறுவர் இ மகளிர் நலனோம்பு சேவைக்கு நிதி ஒதுக்குதல். (சுகாதார வசதிகள்இ பொருட்கள்இ சேவைகளை கொள்வனவு செய்யும் போது வெளிப்படைத் தன்மை பேணல் வாக்குறுதி )
  • சயமஇ கலை இலக்கிய விழாக்களை ஒழுங்கமைத்தல்இ பரிசில் வழங்குதல்
  • ஏழை நிவாரணம் வழங்கல்
  • இவற்றை விட சில குழுக்களை உருவாக்கும் அதிகாரமும் உள்ளன.
  • நிநிக்கொள்கை குழு
  • வீடமைப்பு சமூக சேவை குழு
  •  தொழில் நுட்ப சேவை வழங்கும் குழு
  • ழூசுற்றாடலும் வாழ்க்கை வசதிகள் குழு
  • எமது பிரதேசத்திற்கு அபிவிருத்தி செய்யக்கூடிய வேலைத்திட்டங்களுக்கான வாக்குறுதிகள்
  • உள்ளூர் வீதிகள் அமைத்தல்இ புனரமைத்தல்இ பெயர் சூட்டல்
  • வீதி மின் விளக்குகளை அமைத்தல் கழிவகற்றல்
  • பிரதேசத்தை அழகு படுத்தல்
  • மயானங்களை புனரமைத்தல்இபாதுகாத்தல்
  • முன் பள்ளிகளை நடாத்துதல்
  • பிரதேச நூலகங்களை அமைத்தல்
  • தொற்று நோய்கள் பரவுவதை தடுத்தல்
  • கட்டாக்காலிகளை அகற்றல்
  • உரிய வகையில் கட்டட அனுமதிகள் வழங்கல்
  • சனசமூக நிலையங்களுக்கு உதவல்
  • விளையாட்டு மைதானங்களை உருவாக்கள்இ புனரமைத்தல்
  • பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தல்
  • சிறுவர் பூங்காக்களை உருவாக்குதல்இ
  • பொது கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி பராமரித்தல்இ
  • சந்தை வசதிகளை ஏற்படுத்தல்
  • கலாசார விழாக்களை நடாத்துதல்
  • பொது நோக்கு மண்டபங்களை அமைத்தல்
  • பயணிகள் நிழற்குடை அமைத்தல்
  • மரங்கள் நாட்டுதல்
  • குப்பைகளை அகற்றல்
  • தாய் சேய் நலன் பேணல்
  • வடிககால்களை புனரமைத்தல்
  • குடி நீர் வசதிகளை ஏற்படுத்தல்
  • ஊழலற்ற சேவை
  • ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் பதவி விலகல்
  • கட்சி பேதமின்றி சேவையாற்றல்

அன்பான.....
தமிழ் அரசியல் கட்சிகளே....! 
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களே...!


தமிழ் மக்களுக்கு தாங்கள் செய்ய வேண்டிய விடயங்கள் சிலவற்றை உங்கள் முன்வைக்கின்றோம்.

1.தமிழ் மக்களின் அடிப்படைத்தேவைகளை உங்களால் நிறைவேற்ற முடியுமா என நேர்சிந்தனை செய்து செயற்படவும் அதனை எழுத்துமூலம் ஒவ்வொரு கிராம மட்ட அமைப்புக்களுக்கும் கொடுங்கள்.

2.ஒற்றுமையை விட பிரிவே நிறைந்துள்ள நிலையில் ஒருமைப்பாட்டுடன் பணியாற்றவும் சேவை செய்யவும்

3. கட்சியை முன்னுரிமைப்படுத்தாது தமிழ் மக்களின் உரிமைகளையும் தேவைகளையும்  அபிலாசைகளையும் அபிவிருத்திகளையும் முன்னுரிமைப்படுத்தி செயற்படுத்துங்கள்.

4. கட்சியை விட மக்கள் கருத்துகளுக்கு முன்னுரிமைக் கொடுப்பதுடன் தமிழ் சமூகத்தை முன்னேற்ற உறுதியெடுங்கள்

5.சுயநலத்தை முற்றாக களைந்து சொந்த கருத்துக்களில் மூழ்கிப்போகாமல் மக்களுக்காக பணியாற்ற முனையுங்கள்

6. தமிழினம் இன அழிப்பில் இருந்து மீள முடியாது துன்புறும் சமூகமாகவும் ஊழல் நிறைந்த சமூகமாகவும் மாறி விட்டது. இந்த காலகட்டத்தில் வேட்பாளர்களே ஊழல்கள் இல்லாத தமிழ் சமூதாயம் உதயமாக உழையுங்கள்.

7. மக்களை சமய-சமூக- பிரதேச வேற்றுமைகளால் பிரிக்காது மக்களின் மாண்பை காத்துக்கொண்டு அவர்களின் போர்க்கால வடுக்களை அழியாத மனக்காயங்களையும் உடற்காயங்களை குணப்படுத்த உங்களால் முடியுமா...? என சிந்தியுங்கள்.

8. மக்களின் வாக்குகளை கீழ்படிவோடு கேட்கின்றீர்கள்  வீடு வீடாக சென்று வாக்கு கேட்கின்றீர்கள் வாக்குகளை பெற்றப்பின் மக்களையும் அவர்களின் உரிமைகள் தேவைகள் அபிவிருத்திகள்  கோட்பாடுகள் என்பவற்றினை உதாசீனம் செய்யாதீர்கள்.

9. எதிர்ப்பு  பிரிவினை  போன்ற நிலைகளில் நின்று போட்டியிடாது மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் பெற்றுக்கொடுக்க முன்னின்று உழைக்க முடியுமா?

10. வீராவேசப்பேச்சுக்கள் வெற்றுக்கோசங்கள். உத்தம தியாகிகளான மாவீரர்களின் தியாகங்கள் என்பவற்றை உங்கள் தேர்தல் வெற்றிக்கான பிரச்சார உத்தியாக பயன்படுத்தாதீர்கள்.

11. இவை மக்களின் ஆதங்கங்கள் இவைப்போன்ற பல எதிர்பார்ப்புக்கள் எங்கள் மக்கள் மத்தியில் உள்ளன. இவற்றை இனம் கண்டு உழைக்க முடியுமா...!
என்பதை கருத்தில் கொண்டு உங்கள்   ஆரம்பியுங்கள  உங்கள் சுய நல அரசியலுக்காகவும்  கட்சி நலன் வெற்றிக்காகவும்உங்களின் தேர்தல் இலாபத்திற்காக  சாதி சமய  முரண்பாடுகளை ஏற்படுத்தி மக்களுக்குள்  வேற்றுமையை உருவாக்காதீர்கள் கொடிய சிந்தனையுடன் போட்டியிடாதீர்கள்.

தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி இன்றுவரை மக்களின் மனங்களில் எழுமாக இருந்தால், அதற்கான சரியான பதி லைத் தேடி அறியும் கடமையும் மக்களிடமே உள்ளது.
  • அந்த வகையில்,முன்னைய தேர்தல்களில் நாம் வாக்களித்தவர்கள் எங்களுக்குச் செய்தது என்ன?
  • எங்கள் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்தவர்கள் மக்களின் பிரச்சினைகளை-குறைகளை போக்குவதற்காகக் களத்தில் நின்று சேவையாற்றினார்களா? 
  • வன்னி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்தவும் அவர்களுக்கு உதவும் இவர்கள் செய்த பணி என்ன?

  • பாராளுமன்றத்துக்குச் சென்ற இவர்கள் எங்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறி பாராளுமன்றத்தின் பிரதிநிதித்துவத்துக்கான தங்களின் கடமைகளை முழுமையாகவும் திறமை யாகவும் செய்தனரா?

  • தமிழர் தாயகத்தின் அபிவிருத்திக்காக இவர்கள் கொண்டு வந்த கைத்தொழிற்சாலைகள் எத்தனை, அவை எவை - வழங்கிய வேலை வாய்ப்புக்கள் யாவை - சுயதொழில் முயற்சி களுக்கு இவர்கள் செய்த உதவிகள் என்ன?

  • இடைக்கால வரைபுத் திட்டத்தைத் தயாரிக் கும்போது தமிழ் மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதில் இவர்கள் எடுத்த நடவடிக்கைகள், மக்களைத் தேடிச் சென்று நடத்திய சந்திப்புக்கள், இவர்களின் இத்தகைய கூட்டங்களில் நீங்கள் பங்குபற்றிய சந்தர்ப்பங்கள் ஏதேனும் உண்டா?

  • தமிழினத்துக்கான தீர்வு விடயத்தில் சர்வதேச சமூகத்தை எமக்குச் சாதகமாக்க இவர்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தார்களா? 
  • அல்லது அரசுடன் சேர்ந்து நின்று எங்கள் இனத்துக்கு பாதகம் செய்தார்களா? என்ற கேள்விகளுக்கு விடை தேடுங்கள்.
அதேபோல தேர்தலில் போட்டியிடும் அரசி யல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் இத்தேர்தலில் வெற்றி பெற்றால்,

அவர்கள் என்ன செய்வார்கள். தமிழினம் நன்மை பெறுமா...!
எழுச்சி பெறுமா...! என்ற கேள்விகளுக்கும் விடை தேடுங்கள். உங்களுக்கான பதிலை உங்கள் மனச்சாட்சியுடன் கடந்த காலங்கள் படிப்பினையாக கொண்டு செயற்படுங்கள்.

அதற்கேற்றாற்போல் உங்கள் வாக்குகளை வழங்குங்கள். இது கடவுள் தந்த நல்ல சந்தர்ப்பம்.
எங்கள் அரசியல்வாதிகள் திருந்துவதற் கும் திருத்தப்படுவதற்கும் இந்தத் தேர்தலை விட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை என்பதை உணர்ந்து உங்கள் தீர்ப்பை எழுதுங்கள்.

குழப்பங்கள் பிரச்சினைகள் இன்றி தெளிவாக சிந்தித்து வாக்களிப்போம் இது ஒவ்வொரு இலங்கை குடிமகனின் கடமையாகும்.

தமிழினம் தலைநிமிரட்டும்  தறுதலைகள்  தனியே ஒதுங்கட்டும்


வை.கஜேந்திரன்








 



























உரிமையை நிலைநாட்ட....வாக்குரிமையை பயன்படுத்துங்கள்....வளமான வாழ்வுக்கு...படங்களுடன் Reviewed by Author on February 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.