அண்மைய செய்திகள்

recent
-

தப்பித் தவறி கூட இந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டு விடாதீர்கள்! -


காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லது என கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் ஒரு சில காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால் அது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் என்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அப்படி எந்தெந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

உருளைக்கிழங்கு

காய்கறிகளின் ராஜாவாக அறியப்படும் உருளைக்கிழங்கில் நச்சு பொருட்களும் அதிகம். ஆகவே, நன்கு வேகவைத்து அல்லது வறுத்து சாப்பிட வேண்டும்.
பூமிக்கடியில் விளைவதால் மற்ற காய்களை விட இதில் நச்சுப்பொருட்கள் அதிகம், அதுமட்டுமின்றி இதிலுள்ள உயர் ஸ்டார்ச் சத்தால் செரிப்பதற்கு சிரமம், சமைத்து சாப்பிடும் போது ஈஸியாக செரிமானம் ஆகிவிடும்.

கீரை

கீரை மற்றும் பச்சை இலை காய்கறிகளில் பாக்டீரியாக்கள் அதிகம் நிறைந்திருப்பதால் நன்கு அலசிய பின் வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும். ஆனால், சமைக்காமல் அப்படியே பச்சையாக சாப்பிட்டால் கீரையின் மேலே நிறைந்திருக்கும் பாக்டீரியாக்கள் நம் வயிற்றுக்குள் செல்வதால் தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படும்.

தக்காளி

மனிதர்களுக்கு கிடைக்கும் சிறந்த பழங்களில் தக்காளியும் ஒன்றாகும். ஒரு சாண்ட்விச் அல்லது சாலட்டில் முதன்மையாக இருக்கும்போது தக்காளியின் சுவை இன்றியமையாதது.
இருப்பினும், சமைக்கப்பட்ட தக்காளியில் உள்ள லைகோபீன் நம் உடலை சென்றடையும் அளவிற்கு சமைக்காத தக்காளிகள் சென்றடைவதில்லை. லிகோபீன் என்பது ஒரு பைட்டோ-ஊட்டச்சத்தாகும்.

கேரட்

அனைவருக்கும் பிடித்த காய்கறிகள் பட்டியலில் கேரட் கட்டாயம் இருக்கும். ஆனால், பூமிக்கு அடியில் வளருவதால் கேரட்டில் நச்சுப் பொருட்கள் அதிகம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கேரட்டை சமைத்து சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு கிடைத்துடும் விட்டமின் A, நம் கண்களுக்கு மிகவும் உகர்ந்தது, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்திடும்.

காளான்

காளானில் கடினமான செல்கள் அதிகம் என்பதால் அதை பச்சையாக சாப்பிடுவோருக்கு செரிமானக் கோளாறு ஏற்படுவது வழக்கம்.
ஆனால், அப்படியல்லாமல் புரதச்சத்து மற்றும் வைட்டமின்களும் தாதுக்களும் அதிகம் நிறைந்துள்ள காளானை சமைத்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிச்சயம் கிடைக்கும்.

காலிஃபிளவர்

அதிக சத்துக்கள் நிரைந்துள்ள காலிஃபிளவரை சமைத்து சாப்பிட்டாலே செறிப்பதற்கு பல மணி நேரங்கள் ஆகும்.
ஆனால், சிலர் அப்படியே சாப்பிடும் பழக்கத்தை வைத்துள்ளார்கள். அது முற்றிலும் தவறு. அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால் காலிஃபிளவரை கட்டாயம் சமைத்து சாப்பிடுங்கள்.
தப்பித் தவறி கூட இந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டு விடாதீர்கள்! - Reviewed by Author on February 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.