சுகாதார குறியீட்டு பட்டியலில் முதலிடம் இந்த மாநிலம் தான் -
மக்களுக்கு கிடைக்கும் அடிப்படை சுகாதார வசதி, உடல்நலம் பேணும் செயல்பாடுகள், ஹச்.ஐ.வி. சிகிச்சை உள்ளிட்ட அம்சங்களை மையமாக கொண்டு நாடு முழுவதும் நிதி ஆயோக் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியிருந்தது.
உலக வங்கி மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 80 புள்ளிகளுடன் கேரளா முதலிடத்தை பிடித்துள்ளது.
65.21 புள்ளிகள் பெற்றுள்ள பஞ்சாப் இரண்டாம் இடத்தையும், 63.38 புள்ளிகளுடன் தமிழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் உத்திர பிரதேசம், ராஜஸ்தான், பிஹார், ஒடிசா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனினும் கடந்த முறை வெளியான பட்டியலை விட இந்த முறை சிறு முன்னேற்றம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஹெச்.ஐ.வி சிகிச்சையில் மணிப்பூரும், காசநோய் சிகிச்சையில் லட்சதீவும் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுகாதார குறியீட்டு பட்டியலில் முதலிடம் இந்த மாநிலம் தான் -
Reviewed by Author
on
February 11, 2018
Rating:
No comments:
Post a Comment