அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை கல்வி வரலாற்றில் முதன் முறையாக தரம் 01, 02 மாணவர்களுக்கான புதிய வாய்ப்பு -


இலங்கை கல்வி வரலாற்றில் முதற் தடவையாக தரம் 01 மற்றும் தரம் 02 மாணவர்களுக்கான ஆங்கில பாட புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தரம் ஒன்றிலிருந்து ஆங்கில பாடத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையினை கல்வி அமைச்சு மேற்கொண்டதுடன், அதனை மகரகம தேசிய கல்வி நிறுவகம் இன்றைய தினம் அறிமுகம் செய்துள்ளது.
அத்துடன், அதற்கான பாடபுத்தகம் மற்றும் இருவட்டு என்பனவும் இன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.


குறித்த புத்தகத்தில், கதைகள் வரைதல் ஆடல், பாடல்கள், பேசுதல், கதைத்தல் செயற்பாடுகள் அதற்கான உபகரண பாவிப்பு ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், வகுப்பறை செயற்பாடுகள் போன்றனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் கல்வி கொள்கைக்கு அமைய இதுவரையான காலப்பகுதியில் பாட திட்டத்தில் ஆங்கில கல்வியானது தரம் 03இல் இருந்தே ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய அறிமுக நிகழ்வின்போது, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி, தேசிய கல்வி நிறுவகத்தின் பனிப்பாளர் நாயகம் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.





இலங்கை கல்வி வரலாற்றில் முதன் முறையாக தரம் 01, 02 மாணவர்களுக்கான புதிய வாய்ப்பு - Reviewed by Author on March 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.