அண்மைய செய்திகள்

recent
-

பிரபல பெண் நட்சத்திரங்கள் -தங்கள் உடல்


நாம் வீடு, வாகனம் உள்ளிட்டவற்றை இன்சூர் செய்து வைத்திருப்பதை போல் தங்களின் உடல் பாகங்களை இன்சூர் செய்து வைத்திருக்கிறார்கள்.
இப்படி இன்சூர் செய்து வைத்துள்ள உலக பிரபலங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மல்லிகா ஷெராவட்
இந்திய திரையுலகின் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் மல்லிகா ஷெராவட், பிட்னஸுக்கு பெயர் போன மல்லிகா, தன் உடல் முழுவதையும் இன்சூர் செய்து வைத்துள்ளார்.
தன் உடல் குறித்து தனி கவனம் செலுத்தி வரும் மல்லிகா, அதற்காக நிறைய செலவு செய்வதால் ஒட்டுமொத்த உடலையும் இன்சூர் செய்து வைத்திருப்பதாக தெரிகிறது.

பிரியங்கா சோப்ரா
நடிகைகளுக்கு மிகப்பெரிய ஈர்ப்பே அவர்களது கண்களும், புன் சிரிப்பும் தான் என்பது நாம் அறிந்ததே. அதையே சற்று கூடுதல் அழகாக பெற்ற பிரியங்கா சோப்ரா(35) தன் சிரிப்பையே இன்சூர் செய்து வைத்துள்ளார். இயற்கையாகவே மிக அழகான சிரிப்பை பெற்றவர் பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

சானியா மிர்சா
டென்னிஸ் விளையாட்டில் உலகப்புகழ் பெற்றவர் சானியா மிர்சா, பல பதக்கங்களை தட்டிச் சென்றுள்ள இவர் தான் இந்தியாவில் பலருக்கு டென்னிஸ் விளையாட்டின் மீது காதல் வருவதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறார்.
அவ்வாறு தன் வளர்ச்சிக்கு மிக உதவியாகவும் பக்க பலமாகவும் இருந்த தன் கைகளை இன்சூர் செய்து வைத்துள்ளார் சானியா மிர்சா.

ஜெனிபர் லொபஸ்
கடந்த பல வருடங்களாக அமெரிக்காவின் பிரபல பாடகியாக வலம் வருபவர் ஜெனிபர் லொபஸ்(48). இயற்கையாகவே நல்ல உடல் அமைப்பை கொண்ட ஜெனிபர், தன் பின் அழகை இன்சூர் செய்து வைத்திருப்பது சிலரை ஆச்சரியப்பட வைக்கிறது.
தனது அழகின் மீது தனி கவனம் செலுத்தி அதனை பராமரித்து வரும் ஜெனிபர், தன் பின்னழகை மட்டும் 300 மில்லியன் டொலர்களுக்கு இன்சூர் செய்து வைத்துள்ளார்.

மடோனா
59 வயதாகும் மடோனாவுக்கு பதின் வயதை கடந்த ஒரு மகள் இருக்கிறார், உலக அளவில் தன் கண்களால் அனைவரையும் ஈர்க்கக்கூடிய மடோனாவின் அழகு, அனைவருக்கும் வியப்பு தான்.
பாடகி மற்றும் நடிகையாக வலம் வரும் மடோனா, தன் மார்பகங்களை 2 மில்லியன் டொலர்களுக்கு இன்சூர் செய்து வைத்துள்ளார்.

ரிஹானா
பாப் பாடகி ரிஹானாவின்(30) குரலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பாப் உலகில் கொடிகட்டி பறக்கும் ரிஹானா கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டொலர் அளவுக்கு தன் கால்களை இன்சூர் செய்து வைத்துள்ளார்.

பிரபல பெண் நட்சத்திரங்கள் -தங்கள் உடல் Reviewed by Author on March 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.