அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் மீன் உண்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! -


இலங்கை மீனவர்களினால் பிடிக்கப்படும் 40 முதல் 60 வீதம் வரையிலான மீன் வகைகள் உண்பதற்கு பொருத்தமற்றவை என கடல் ஆராய்ச்சி நிறுவனமான நாரா நிறுவனம் தெரிவித்துள்ளதாக மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் நாரா நிறுவனம் இது தொடர்பிலான ஆய்வுகளை நடத்தியுள்ளது.
இந்த வகை மீன்கள் கருவாட்டுக்கும் பொருத்தமற்றவை எனவும், அவை வெறுமனே அழிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, இவ்வாறான மீன் வகைகள் பிடிப்பதனை தடுக்கும் வகையில் மீனவர்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
நவீன படகு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், தரமான ஐஸ் மற்றும் நீர் பயன்பாடு, நவீன தொழில்நுட்பத்தில் மீன்களை பிடித்தல், மீன்களை இறக்குமதி செய்வது குறித்த நவீன முறைகளை அறிமுகம் செய்தல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மொத்த தேசிய உற்பத்தியில் மீன்பிடித்துறையினால் குறைந்தளவு பங்களிப்பே வழங்கப்படுவதாகவும், இந்தப் பங்களிப்பு அதிகரிக்கப்படவுள்ளதாகவும் மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையில் மீன் உண்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! - Reviewed by Author on March 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.