அண்மைய செய்திகள்

recent
-

அமரர் ச.கியூபட் பறுனாந்து(GS) அவர்களின் 1ம் ஆண்டு ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி....


அமரர் ச.கியூபட் பறுனாந்து(GS) அவர்களின் 1ம் ஆண்டு ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது வெற்றி அன்னைக் குழு

பேசாலை வளர்கலை மன்றத்தின் அனுசரணையுடன் பேசாலை விக்டறிஸ் விளையாட்டுக் கழகம் இணைந்து அமரர் ச.கியூபட் பறுனாந்து(GS) அவர்களின் 1ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 17.03.2017 அன்று சனிக்கிழமை பேசாலை  கரப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது இதில் பேசாலை பங்கைச் சார்ந்த விளையாட்டுக் குழுக்கள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டியது.

இறுதிச்சுற்றில் வெற்றி அன்னை குழு வெற்றிக்கிண்ணத்தினை சுவீகரித்தது. இவ் விளையாட்டு நிகழ்வின் விருந்தினர்களாக

 பேசாலை பங்குத்தந்தை அருட்பணி.அலக்சாண்டர் பெனோ சில்வா அடிகளார் மன்/புனித பத்திமா பாடசாலை அதிபர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லஸ்(FSC)இ
வடமாகாண சபை உறுப்பினர் திரு.அ.பிறிமுஸ் சிராய்வா (சட்டத்தரணி) மன்/சென் மேரீஸ் பாடசாலை அதிபர் திரு இராஸ்வரன் பச்சேக்
பேசாலை பங்கைச்சார்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள்
பேசாலை பொலிஸ் அதிகாரிகள் கிராமத்தல் உள்ள அமைப்புகள் மன்றங்கள்-சங்கங்கள-கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் அமரர் ச.கியூபட் பறுனாந்து (GS)அவர்களின் உறவினர்கள் பேசாலை கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு இவ் விளையாட்டு விழாவினை சிறப்பித்தனர்.


இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய விருந்தினர்கள் கூறுகையில்
அமரர் ச.கியூபட் பறுனாந்து (GS)அவர்களின் ஆன்ம சாத்திக்காக இறைவனை வேண்டிக்கொண்டதோடு இவரின் வாழ்வைப் பொறுத்தவரையில் பேசாலை கிராமத்தின் பல்வேறு முன்னேற்றகரமான பொதுச் செயற்பாடுகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஒரு கிராம பற்றாளன் எனவும் குறிப்பாக பேசாலைப் பங்கினை பொறுத்தவரையில் பல்வேறு கலைகள்- விளையாட்டுக்களின் ஊடாக கிராமத்தின் முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் அயராது பாடுபட்டு உழைத்ததோடு இளம் சமுதாயத்திற்கு ஒரு முன்நோடியாகவும் செயற்பட்டவர்
என்பது யாவரும் அறிந்த விடயமே. எனவே கிராம பற்றாளன் ஒருவருக்கு இவ்வாறானதொரு ஞாபகார்த்த விளையாட்டு விழாவினை நடாத்துவது மகிழ்ச்சியைத் தருவதோடு மேலும் இவரைப் போன்ற சமூக நலன் விரும்பிகளும் கிராம மட்டத்தில் தன்னார்வத்தோடு பணியாற்றக்கூடிய நல் உள்ளங்களும் மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் தமது கருத்துரைகளில் தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.








அமரர் ச.கியூபட் பறுனாந்து(GS) அவர்களின் 1ம் ஆண்டு ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி.... Reviewed by Author on March 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.