அண்மைய செய்திகள்

recent
-

ஒபாமாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -


அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தின்போது உரையாற்றுவதன்மூலம் 1.3 மில்லியன் டொலர்கள் சம்பாதிக்க உள்ளார்.

அதேபோல் ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு ஒரு வார சுற்றுப்பயணமாக செல்லவிருக்கும் அவருக்கு ஏழு இலக்க ஊதியம் அளிக்கப்பட உள்ளது.
மிகச்சிறந்த கல்வியாளரான ஒபாமா, விரிவுரையாளர் பணி உட்பட கல்வி தொடர்பான பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
Los Angelesஇலுள்ள Occidental Collegeஇல் அவர் தனது முதல் உரையை ஆற்றினார்.

இன்று அவரது உரைக்கு மில்லியன் கணக்கில் கொடுக்க நாடுகள் தயாராக உள்ளன.
புத்தகங்கள் பல எழுதியுள்ள ஒபாமாவுக்கு அதனால் வரும் பிரசுரிப்பு உரிமைக்கான தொகையே பெருந்தொகை ஆகும்.
அவர் அதிபராக இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் 400,000 டொலர்கள். இதுபோக செலவுக்காக 150,000 டொலர்கள், வரி விலக்கு பெற்ற 100,000 டொலர்கள் பயணச் செலவுக்கான தொகை, பொழுதுபோக்குக்காக 20,000 டொலர்கள் வழங்கப்பட்டன.
மொத்தத்தில் ஒபாமாவின் சொத்து மதிப்பு தோராயமாக 40 மில்லியன் டொலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அதேபோல் ஒபாமாவின் மனைவியான மிச்செல் ஒபாமாவின் சொத்து மதிப்பும் 40 மில்லியன் டொலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒபாமாவுக்கு 1.4 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது, ஆனால் அவர் அந்தத் தொகையை பல அறக்கட்டளைகளுக்கு வழங்கிவிட்டார்.


ஒபாமாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - Reviewed by Author on March 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.