அண்மைய செய்திகள்

recent
-

48 ஆயிரம் நாட்கள் பயணித்து 132 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த கடிதம் -


132 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டு பாட்டிலில் வைத்து கடலில் மிதக்கப்படவிட்ட கடிதம் அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியை சேர்ந்த படகோட்டி பார்க் பவுலா என்பவர் தனது கைப்பட கடிதம் ஒன்றை 1886 ஆம் ஆண்டு யூன் மாதம் 12 ஆம் திகதி எழுதியுள்ளார். தான் எழுதிய அந்த கடிதத்தை நீர் புகாமல் ஒரு பாட்டிலில் வைத்து அடைத்து கடல் நீரில் விட்டுள்ளார்.

சுமார் 48 ஆயிரம் நாட்கள் கடலில் பயணித்துவந்த நிலையில், சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் உள்ள கடற்கரை ஒன்றில் ஒதுங்கியுள்ளது.
இந்த கடிதம், அவுஸ்திரேலியாவை சேர்ந்த டோன்யா இல்மேன் என்ற பெண்ணின் கையில் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், கடலில் ஏற்படும் நீரோட்டங்கள் பற்றியும், கார்டிப்பில் தொடங்கிய தங்கள் பயணம் இந்தோனேசியா வரை தொடர்ந்ததாக ஜேர்மன் மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

108 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கடிதம் மக்கள் மத்தியில் இதுவரை அறியப்பட்ட நிலையில், தற்போது 132 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த கடிதம் கிடைத்துள்ளது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

48 ஆயிரம் நாட்கள் பயணித்து 132 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த கடிதம் - Reviewed by Author on April 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.