அண்மைய செய்திகள்

recent
-

அசைவ உணவுகள் சாப்பிட்ட பின்னர் இதை கண்டிப்பா செஞ்சிடுங்க: முக்கிய தகவல் -


அசைவ உணவுகள் சாப்பிடுவதை பலரும் அதிகம் விரும்புவார்கள். இது போன்ற உணவு வகைகள் பலவற்றில் அதிகளவில் கொழுப்புகள் இருக்கும்.
இதோடு எண்ணெய்களும் அதிகளவு உள்ளதால் அது உடலுக்கு கெடுதல் விளைவிக்கும்.
அதனால் கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பின்னர் சில விடயங்களை செய்தால் அது உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும்.

நடைப்பயிற்சி
எண்ணெய் அதிகம் உள்ள அல்லது கனமான உணவுகளை எடுத்துக் கொண்டால், மிகக் கடினமான உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நடைபயிற்சி மேற்கொள்வது நல்ல பலனைத் தரும். அதிக கலோரிகளை எரிக்க நடைப்பயிற்சி பயன்படுகிறது.
வெதுவெதுப்பான தண்ணீர்
ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை பருகுவதால் எண்ணெய் உணவு எளிதில் ஜீரணமாகிறது. இதனால் கல்லீரல், வயிறு, மற்றும் குடல் பகுதி சேதமடைவதில் இருந்து பாதுகாக்கப்பட்டு ஆரோக்கியமாக மாறுகிறது.
உடனே தூங்கக்கூடாது
இரவு உணவிற்கும், நாம் உறங்கச் செல்வதற்கும் இடையில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரம் இடைவெளி தேவை.
அதே போல எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொண்ட பின் ஐஸ் கிரீம், குளிர்பானம் போன்ற குளிர்ந்த பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். குளிர்ந்த உணவுகளை சாப்பிட்டால் கல்லீரல், வயிறு, குடல் போன்றவற்றில் எதிர்மறை விளைவுகள் உண்டாகும்.

ஆயுர்வேத தீர்வுகள்
எண்ணெய் உணவுகளின் எதிர்மறை விளைவுகளைப் போக்க சில ஆயுர்வேத தீர்வுகள் உள்ளன. அவை பின் வருமாறு,

திரிபலா
ஒரு ஸ்பூன் திரிபலா பவுடரை வெதுவெதுப்பான நீரில், அல்லது தேனில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகுவதால் எண்ணெய் உணவுகள் ஜீரணமாகும்.

குக்குலு
குக்குலு கொழுப்பு அளவைக் குறைக்கவும் மற்றும் உயர் கொழுப்பு உணவால் ஏற்படும் கெட்ட விளைவுகளைக் குறைக்கவும் உதவும் ஒரு மூலிகை ஆகும்.
ஆனால் இதனை வாங்கி உட்கொள்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது நல்லது.

வால் மிளகு
வால் மிளகு, கொழுப்பின் விரைவான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன. இது மிகவும் காரமான உணவுப் பொருள் என்பதால் ஒரு நாளைக்கு இரண்டு முறை 2 மிளகின் தூளை தேன் கலந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் உட்கொள்வது நல்லது.
அசைவ உணவுகள் சாப்பிட்ட பின்னர் இதை கண்டிப்பா செஞ்சிடுங்க: முக்கிய தகவல் - Reviewed by Author on April 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.