அண்மைய செய்திகள்

recent
-

ஐ.பி.எல்லுக்கு எதிராக புரட்சிப் பயணம்: இயக்குனர் பாரதிராஜா அதிரடி -


பிரபல இயக்குனரான பாரதிராஜா சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து புரட்சிப் பயணம் தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.
காவேரி மேலாண்மை விவகாரம் குறித்து மத்திய அரசு அடம் பிடித்து வருவதாக கூறி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் இன்று ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெறவிருப்பதால், இப்போட்டியை யாரும் பார்க்க வேண்டாம் என்றும் போட்டி நடைபெறக் கூடாது எனக் கூறப்பட்டது.
போட்டியை பார்க்காமல் சென்றாலோ அல்லது நடைபெறாமல் இருந்தாலோ இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவது நம்முடைய முழக்கம் போய் சேரும் என்பதன் காரணமாகவே இப்படி கூறப்பட்டு வருகிறது.
ஆனால் அதையும் மீறி போட்டி இன்று திட்டமிட்ட படி நடைபெறும் என நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி மைதானத்திற்குள் செல்லும் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல இயக்குனர் பாரதிராஜா, நாங்கள் கிரிக்கெட் வேண்டாம் என்று சொல்லவில்லை, தற்போதைய நிலைமைக்கு தள்ளிப் போடுங்கள் என்று தான் கூறுகிறோம்.
இந்த போட்டியை நடத்தி எங்கள் இளைஞர்களை மழுங்கடித்துவிடாதீர்கள். இப்போது தான் இன உணர்வோடு ஒன்று சேர்ந்திருக்கிறோம், அதை அழித்துவிடாதீர்கள், எவ்வளவோ கேட்டுப் பார்த்தோம் அது நடக்கவில்லை.
இதனால் இன்று மாலை 5 மணியளவில் அண்ணா சிலையில் இருந்து ஒருங்கிணைந்து அங்கிருந்து எங்களின் புரட்சிப் பயணம் தொடங்கும், எல்லா அமைப்பினரிடும் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.

எந்தக் கட்சிக் கொடியும் இல்லாமல், எல்லா அமைப்பினரும் ஒன்றாக வந்து போராடுவோம் என்று அவர்களும் கூறியிருக்கிறார்கள்
முதல்வரை சந்தித்த போது ஐபிஎல் போட்டியை நிறுத்த முடியாதா என்றேன், அது எங்கள் வரையறைக்குள் இல்லை என்று கூறிவிட்டார். சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டியாவது ஐபிஎல் போட்டியை தடுத்திருக்கலாம்.
அறவழியில் போராட வேண்டாம் என்றால் எந்த வழியிலும் வருவோம், தன்மானத்தை காட்டிலும் உயிர் பெரிதில்லை என்றும் பாரதிராஜா கூறியுள்ளார்.
ஐ.பி.எல்லுக்கு எதிராக புரட்சிப் பயணம்: இயக்குனர் பாரதிராஜா அதிரடி - Reviewed by Author on April 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.