அண்மைய செய்திகள்

recent
-

பன்மைவாதத்திற்கான பட்டைய சாசனம் உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடலில்.....மன்னார் குழு....

கலந்துரையாடலில் மன்னார் குழுவும்  இணைந்துகொண்டுள்ளது
தேசிய ரீதியில் சமயங்களினுடாக நல்லிணக்கம் காணல்  எனும் தொணிப்பொருளில் வடக்கு தெற்கினை சேர்ந்த எட்டு மாவட்டங்களில் இருந்து
  • மன்னார்
  • புத்த்ளம்
  • அம்பாறை
  • நுவரெலியா
  • கிளிநொச்சி
  • முல்லைத்தீவு
  • காலி
  • மாத்தறை மாவட்டங்களில்  இருந்து சுமார் 100 பேர் கொண்ட உறுப்பினர்களுக்கு இவ் ஒருநாள் கலந்துரையாடல் நிகழ்வு  02- 04- 2018 அன்று   கொழும்பு இலங்கை  மன்றத்தில் நடைபெற்றது.
மேற்குறித்த மாவட்டங்களில் உள்ள அமைப்புக்கள் மதத்தலைவர்கள் ஊடகவியலாளர்கள் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு 05 குழுவாக பிரித்து
  • நிலைமாறு கால நீதி தொடர்பான கலந்துரையாடல்
  • பன்மைத்துவம் சமயங்களினூடே  நல்லிணக்கம் பேணல் தொடர்பான 02நாள் பயிற்ச்சி பட்டறைகள் நடைபெற்று அதன் முக்கிய தீர்மானம் சாசனம் நிறைவேற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் எட்டு மாவட்டங்களில்  இருந்து கலந்துகொண்ட மதத்லைவர்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள்  தங்களினதும் கருத்தினையும் தங்களது மாவட்டம் சார்பான பிரச்சினைகளையும் முன்வைத்ததோடு தேசியரீதியில் சமயங்களின் ஊடாக எவ்வாறு ந்ல்லிணக்கம் பேணலாம் என்ற
  • இனம்
  • மொழி
  • மதம்
  • கலை கலாச்சாரம்
  • பண்பாட்டு விழுமியம்
  • அபிவிருத்தி
  • வளப்பங்கீடு 
இவற்றினை முறையாக கையாளுதல் சமாதானம் சமத்துவம் பேணலாம் என்ற வகையில்
 80 கருத்துக்களினை முன்வைத்தனர்  இந்தகருத்துக்களின் இருந்து அமையவுள்ள  சாசனத்திற்கு தரமான கருத்துக்கள் உள்வாங்கப்படும்.

இவ்நிகழ்வினை OPEN நிறுவனம் இணைந்து தேசிய சமாதானப்பேரவையுன்-NPC இணைந்து  USAID நிதி அனுசரணையுடன்
Dr.Jehan Perera Exexcutive Director-NPC தலைமையில்  வளவாளராக  J.Benedict அமெரிக்காவில் இருந்து வருகை தந்த Danielle Reiff  USAID OFFICE DIRECTOR OF GOVERMENT இவர்களுடன்  தேசிய சமாதனப்பேரவை  அதிகாரிகளான 
Venuri De Silva project Manager-NPC USAID R2R
Amarasinghe Senior Project Officer-NPC-Srilanka
Mr.A.Medoshan Project Officer-NPC-Northern Province
 கலந்து கொண்டு சிறப்பித்தனர்
சூபிட்சமான இலங்கை பன்மைத்துவத்துடன் திகழ்வேண்டும் என்பதற்கான பெருமுயற்ச்சியாக இதைக்காணலாம்.

தொகுப்பு- வை-கஜேந்திரன்
































பன்மைவாதத்திற்கான பட்டைய சாசனம் உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடலில்.....மன்னார் குழு.... Reviewed by Author on April 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.